மீண்டும் அடாவடி பேச்சு களத்தில் இறங்கியது பாஜக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவால் தலைமறைவு?

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது மதுரை காவல் நிலையத்தில் பாஜகவினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மூன்று பிரிவுகளில் R. s பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading...

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை தரக்குறைவாக பேசியிருந்தார், பட்டியல் இனத்தை சேர்ந்தவர் நீதிபதியாக வந்தது கலைஞர் போட்ட பிச்சை எனவும் பேசியிருந்தார், இந்நிலையில் மிக பெரிய அளவில் பாரதிக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன் வீட்டில் வேலை செய்யும், டிரைவர், உதவியாளர், உள்ளிட்ட அனைவரும் அரிஜன மக்கள் என பட்டியல் இனமக்களை சொல்லியிருந்தார், இது முதலாளித்துவ மனப்பான்மையில் மீண்டும் அடிமை படுத்தி பேசியதாகவும் பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Loading...

இதற்கு முன்னரும் இதே போன்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை மருத்துவ படிப்பு படித்ததே கலைஞர் போட்ட பிச்சை எனவும் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார், இதனையடுத்து R. S பாரதியின் பேச்சிற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கிலும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் புகார் அளிக்கபட்டுள்ளது.

இ பாஜக மாநில பட்டியல் சமூக ஊடக தலைவர் சிவாஜி அவர்களின் தலைமையில் மதுரை கூடல் புதூர் காவல் நிலையத்தில், தலித் சமூக மக்களின் மனம் புன்படும் படி அவர்களுக்கு எதிராக பேசிய திமுக அமைப்பு செயலாளர் RS பாரதியை, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் மனுவில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படி RS பாரதி செயல்பட்டதாலும், தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட சாதியை கீழ் தரமாக பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர். பாரதியை காவல்துறை கைது செய்யவேண்டும் எனவும், அவரது ஆணவ பேச்சிற்கு சரியான தண்டனையாக அதுதான் இருக்கும் எனவும் வலியுறுத்தபட்டு வருகிறது. இதற்கிடையில் தன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதை அறிந்த ஆர் எஸ் பாரதி முன் ஜாமின் பெரும்வரை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*