Connect with us

#24 Exclusive

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பிரபல இயக்குனர் வெற்றி!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று காலை 9 மணி முதல் சென்னை அண்ணா சாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

532 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செய லாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Loading...

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் அதன்பின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதனையடுத்து சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 235 வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயலாளர் பதவிக்கு T.மன்னன், பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending