சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்களில் 7 தமிழர்கள்? பட்டியலை ஒப்படைத்தது சுவிஸ் அரசு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு !

சுவிஸ் :

Loading...

உலகில் கருப்பு பணங்களை சட்ட ரீதியிலாக வைத்து தனது நாட்டு வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் அரசாக ஸ்விட்சர்லாந்து இருந்துவந்தது, இதனால் உலகம் முழுவதும் ஊழல், வரிகட்டாமல் ஏமாற்றிய கருப்பு பணங்களை ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் பலரும் சுவிஸ் வங்கியில் குவித்து வந்தனர்.

அங்கு சேமிக்கப்படும் பணம் குறித்த விவரங்கள், பெயர்கள், ஏஜெண்டுகள், பணம் பதுக்கியவர்களின் எந்த ஒரு தகவலையும் எந்த நாட்டிற்கும் கொடுக்கமாட்டோம் என்ற அடிப்படையில் கருப்பு பணங்களை சுவிஸ் வங்கி பெற்றுக்கொண்டு தனது நாட்டினை வளப்படுத்தியது, மேலும் சுவிஸ் வங்கியில் அதிகமாக பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருப்பதாக பல வருடங்களாக செய்தி தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

Loading...

காங்கிரஸ் அரசாங்கமும் கருப்பு பணத்தினை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது ஆனால் அவை பெரிய அளவில் களத்தில் எதிரொலிக்கவில்லை, இந்நிலையில் கருப்பு பணத்தை மீட்போம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக அரசாங்கம் 2014 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து அரசாங்கத்திடம் தொடர்பு கொண்டு பணம் பதுக்கியவர்கள் பெயரை பெற முயற்சிகள் மேற்கொண்டது.

அவற்றின் விளைவாக முதற்கட்டமாக 150 நபர்களின் விவரங்களை கடந்த ஜனவரி மாதம் சுவிஸ் அரசு வழங்கியது, ஆனால் அவற்றில் பெயர்கள் விவரங்கள் இல்லாமல் குறியீடுகள் மட்டுமே இருந்ததால் அடையாளம் காணுவதில் சிரமம் தொடர்ந்தது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சுவிஸ்ஸில் பணம் பதுக்கிய இந்தியர்களின் முழு பட்டியல் மற்றும் வெளிநாட்டு ஏஜென்ட்கள் மூலம் பணத்தினை பதுக்கியவர்களின் பட்டியலை சுவிஸ் அரசாங்கம் மற்றும் வங்கி நிர்வாகம் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இதில் அதிர்ச்சி தரும் செய்தியாக பணம் பதுக்கியவர்களின் பெரும்பான்மை நபர்கள் பினாமிகள் மற்றும் இறந்தவர்கள் பெயரில் சுவிஸ்ஸில் அக்கௌன்ட் திறந்து பணத்தினை பதுக்கி இருக்கிறார்கள், ஆனால் தற்போது முழு விவரம் கிடைத்துள்ளதால் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவற்றில் தமிழகத்தை சேர்ந்த 7 முக்கிய தலைவர்கள் பினாமி பெயரில் பணத்தினை பதுக்கியதை அரசு கண்டறிந்துள்ளது.

அவர்கள் இந்தியா முழுவதும் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும், விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமிர்திருக்கும் முக்கிய நபர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கட்சி தலைவர் ஒருவர் ஏற்கனவே நிதி முறைகேடுகளில் சிக்கி சிறை சென்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளதால், விரைவில் தமிழக அரசியலிலும் மிக பெரிய அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று இப்போதே பரபரப்பு எழுந்துள்ளது.

ஆமாம் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிறை சென்ற அரசியல் தலைவர் யார்?

எங்கே 15 லட்சம் அக்கௌன்ட்டில் போட்டாரா என்று கேள்வி கேட்ட அரசியல் தலைவர்கள் இப்போது என்ன செய்ய போகிறார்களோ?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*