Connect with us

அரசியல்

சுஷ்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் ! பிரதமர் மோடி நெகிழ்ச்சி !

Published

on

சுஷ்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் ! பிரதமர் மோடி நெகிழ்ச்சி !

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்யமுடியாமல் விட்டுச்சென்ற வாக்குறுதியை அவரது மகள் நிறைவேற்றியுள்ளார். அதனால் பிரதமர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டில் சிக்கி தவித்த பல இந்தியர்களுக்கு உதவி செய்துள்ளார். சமூகவலைத்தளமான ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்ட சுஸ்மா அதில் உதவி கேட்போருக்கு சில மணி நேரங்களில் உதவி செய்து நாடு திரும்ப வழிவகை செய்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலகுறைவு காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் ஓய்வு எடுத்துவந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி திடீரென உயிரிழந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சுஸ்மா உயிரிழப்பதற்கு சிறிது நேரம் முன்பு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவிற்காக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவிடம் பேசியுள்ளார்.

அப்போது சுஷ்மா, சால்வேயிடம் கூறிய கடைசி வார்த்தைகளை நெகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் கூறியவை :-


அன்றைய தினம் சரியாக இரவு 8.50 மணிக்கு நான் சுஷ்மா அவர்களிடம் பேசினேன். வழக்கில் குல்பூஷன் ஜாதாவிற்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, நான் எனக்குக் கொடுக்கவேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தைத் தர வேண்டும் என சுஷ்மா அவர்களிடம் கூறினேன்.

பின்னர் கட்டாயம் நேரில் தான் வந்து வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்தேன். சுஷ்மாவும் அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு வந்து கட்டாயம் வாங்கிக்கொள்ளுமாறு என்னிடம் கூறினார். ஆனால் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு சுஷ்மா சுவராஜ் உயிரிழந்துவிட்டார். என்று சோகத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்
சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி நேற்றைய தினம் வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவைச் அவரது இல்லத்தில் சந்தித்து அவருடைய கட்டணமாக ஒரு ரூபாயை தாயின் சார்பாக வழங்கினார். இந்த சம்பவத்தை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கெளசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பலரும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றியதற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர், இதில் பிரதமர் மோடி சுஷ்மாவின் கணவரும் கவர்னரும் ஆகிய ஸ்வராஜை தொடர்புகொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

சுஸ்மா இறப்பதற்கு முன்பு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தனது வாழ்நாள் ஆசை என்றும் அதை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி என கூறியது குறிப்பிடத்தக்கது.

©tnnews24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share