Connect with us

#24 Exclusive

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என உலக நாடுகளில் சிங்கமென கர்ச்சித்த சுஸ்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு !

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மாரடைப்பு ஏற்பட்டு, நேற்று இரவு பத்து மணியளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 67 வயதாகும் அவருக்கு சுவராஜ் கவுசல் என்ற கணவரும், பன்சூரி என்ற மகளும் உள்ளனர்.

1953-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ்,  சட்டப்படிப்பை நிறைவுசெய்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  தமது 25வது வயதில், மாநில அமைச்சராக பொறுப்பேற்ற அவர், இளம் வயதிலேயே அமைச்சரான பெருமைக்கு சொந்தக்காரரானார்.

Loading...

சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 

Loading...

சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.

1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

மே 2008 – 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

இவரது காலகட்டத்தில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி தமிழகம் கொம்டுவந்தார்.

நேபாள் நாட்டிற்கு யாத்திரை போன தமிழர்களை மீட்க உடனடியாக ஹெலிஹாப்டர்களை அனுப்பி அவர்களை மீட்க உத்தரவிட்டு இந்தியா அழைத்துவந்தார்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளிடம் சிக்கிய சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாதிரியாரை மீட்டு வந்தார்.

ட்விட்டரில் அவரை தொடர்புகொண்ட அனைவரையும் ஆபத்தில் இருந்து உடனடியாக விடுத்திருக்கிறார்.

உலக வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் காஷ்மீர் மட்டுமல்ல பாகிஸ்தான், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியே அது இந்தியர்களின் நிலம் என்று ஆவேசத்துடன் உலக நாட்டிற்கு தெரிவித்தவர்.

தான் இறப்பதற்கு 5 மணி நேரம் முன்பு ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியாவுடன் முழுமையாக இணைத்த மோடிக்கு எனது நன்றி என்றும் என் வாழ்நாளில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நாள் இது என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர். 

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending