சூர்யா கார்த்தி வாய்ஸ் கொடுத்து கொண்டு இருக்க அங்கு ஆப்பு வைக்கப்பட்டது. குடும்பமே கதறல் !!!

தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள் சிலர் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் மக்கள் மத்தியில் குறிப்பாக ஊடகங்கள் மத்தியில் அழகாக அறிக்கை என்ற பெயரில் நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என விமர்சனங்கள் பரவலாக எழுந்து வருகின்றன.

Loading...

நடிகர் கார்த்தி நேற்றைய தினம் EIA 2020 வரைவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை கொண்டு அறிக்கை வெளியிட்டதாக பாஜக குற்றசாட்டு முன்வைத்த நிலையில் இன்று அதையே வலியுறுத்தி அவரது அண்ணன் சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், வழக்கமாக மத்திய அரசு மீது ஏதாவது எதிர்ப்பு எழுந்தால் சூர்யா குடும்பத்தினர் அங்கு நேராக வந்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.

அந்த வகையில் இப்போது EIA பிரச்னையை பெரிது படுத்த சூர்யா குடும்பத்தினர் களத்தில் இறங்கிவிட்டனர், விரைவில் ஜோதியாகவும், சிவகுமாரும் களத்தில் இறங்குவார்கள் என கூறப்படுகிறது, இப்படி சூர்யா குடும்பத்தினர் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்து கொண்டு இருக்க சத்தமில்லாமல் சூர்யாவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

Loading...

முதலில் தெலுங்கில் சூரரை போற்றும் திரைப்படத்தில் ஈ வே ரா புகைப்படம் இருந்தால் வெளியிட முடியாது என அங்குள்ள இந்து அமைப்புகள் போர்க்கொடி தூங்குவதாக வெளியான செய்தியை தொடர்ந்து ஈ வே ரா புகைப்படத்தை எடுத்துவிட்டனர்,
முன்னதாக ’பொன் மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு தமிழக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யா தனது முடிவிலிருந்து பின் வாங்காமல், ’பொன் மகள் வந்தாள்’ படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்தார்.

தற்போது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், இந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்பு சொல்லப்பட்டது. அத்துடன் தமிழக திரையரங்குகளில் சூர்யா கார்த்தி திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆன்லைன் மூலம் அமேசான் PRIME மூலம் சூரரை போற்று படத்தை 50 கோடி மற்றும் நிகர மதிப்பீடு அளவில் விற்க மீண்டும் படக்குழு அணுகியது, அவர்களும் வாங்க முடிவெடுத்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் prime குழுவிற்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து படத்தை நீங்கள் வெளியிட்டால் நாங்கள் இந்த தளத்தில் இருந்து வெளியேறி விடுவோம் எனவும் காங்கிரஸ் கட்சியின் முகமாக சூர்யா செயல்படுவதாகவும் நக்மா கொடுக்கும் காரியத்தை சரியாக செய்து வருவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து சூரரை போற்று படத்தை வாங்கும் முடிவை prime நிறுத்தி வைத்துள்ளதாம், இதனையடுத்து பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில்தான் வேறு வழியின்றி குடும்பத்தினர் இப்போது போராட்ட களத்தில் இறங்கியுள்ளாராம். முருகன் கதாபத்திரத்தில் நடித்த சிவகுமார் அதன் மூலம் புகழ் அடைந்தார் ஆனால் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை எதிர்த்து தமிழகமே போராடியபோது ஒரு வாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3932 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*