பொன்மகள் வந்தாள் ரிலிஸ் சர்ச்சை! முதல்முதலாகப் பேசிய சூர்யா

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து  படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. 

Loading...

மேலும் ஊரடங்கு எப்போது விலக்கப்படும் என்பதும் தெரியாத நிலையில் படத்தை அப்படியே வைத்திருந்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்பதால் நடிகர் சூர்யா அந்த படத்தை நேரடியாக வெளிநாடுகளில் செய்வது போல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைமிடம் 9 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இதன மூலம் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

சூர்யாவின் இந்த செயலால் மேலும் சில தயாரிப்பாளர்களும் இதுபோல தங்கள் படங்களை விற்க முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவிடம் இதுபோல செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும், அதனால் இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகளை மீறி மே 29 ஆம் தேதி படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

Loading...

இந்நிலையில் இதுவரையில் இந்த படம் பற்றி பேசாத தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா இப்போது தங்கள் முடிவு குறித்து விளக்கமளித்துள்ளார். ‘திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் கொண்டாட்டம் வேறு எந்த வடிவிலும் கிடைக்காது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் ஒதுக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் படங்கள் திரையரங்குகளை பிடிப்பதில் சிக்கல் இருக்கும் சூழலில் மாற்று வழியை கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும் வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு OTT நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*