Connect with us

#24 Exclusive

திமுகவில் இணைந்த அரசகுமார் அவருடன் சேர்ந்து மிக முக்கிய பாஜக தலைவரும் நீக்கப்பட்டார் !

Published

on

சமூகவலைத்தளம் : பாஜக துணை தலைவராக பதவி வகித்த அரசகுமார் பாஜகவில் இருந்து நீக்கப்படுவார் என்று முதலில் நாம் தகவலை சொல்லியிருந்தோம் அத்துடன் அவருக்கு ஆதரவாக இருந்த தேசிய தலைவர் உள்ளிட்டவர்களும் நீக்கப்படுவார்கள் என்ற தகவலையும் முதலில் கூறியிருந்தோம் இந்நிலையில்தான் அரசகுமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அரசு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வருவார் என்றும் நான் ரசித்த ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டுருந்தார், இது பாஜக தொண்டர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை உண்டாக்கியது அரசகுமாரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அரசகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதினார்.

Loading...

இந்நிலையில் அரசகுமார் பஞ்சாயத்து டெல்லியில் தமிழக பாஜக பொறுப்பாளர்களாக நியமிக்க பட்ட பலரையும் அமிட்ஷா நேரடியாக வெளுத்து வாங்கியிருக்கிறார், குறிப்பாக அவரை கட்சியில் 2014-ம் ஆண்டு இணைத்த தமிழிசை முதல் அனைவருக்கும் நேரடியாக தொலைபேசி அழைப்புகள் சென்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Loading...

தமிழகத்தில் இன்னும் எத்தனை நபர்கள் இதுபோன்று பதவிக்காக பாஜகவில் இருக்கிறார்கள், யார் யார் எல்லாம் திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற முழு பட்டியலும் இரண்டு நாட்களுக்கு தனக்கு தேவை என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் அமிட்ஷா இந்த நிலையில்தான் நீண்ட நாட்களாக முக்கிய பொறுப்பில் உள்ள மேலிட பொறுப்பாளரையும் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார் இதுகுறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளிவர இருக்கிறது.

மேலும் தமிழக பாஜக உருப்படாமல் இருக்க கொள்கை ரீதியாக முரண்பட்ட திமுகவுடன் தொடர்பில் உள்ள தலைவர்கள் பட்டியலை பார்த்து ஆடிப்போய்விட்டார் அமிட்ஷா குறிப்பாக மேடையில் வீரவசனம் பேசும் பலரும் அதில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில இடைத்தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக பாஜகவில் மிக பெரிய களையெடுப்பு இருக்கும் என்றும் தற்போது மேலிட பொறுப்பாளர் நீக்கப்பட்ட செய்தி விரைவில் வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அரசகுமார் தாய் கழகத்தில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பாஜகவை விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இனிதான் தமிழக பாஜகவில் அதிரடி இருக்கிறதாம்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552