Connect with us

#24 Exclusive

அயோத்தி வழக்கின் சீராய்வு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு கடந்த பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. பாபர் மசூதி இருந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வாரியங்கள் மற்றும் முக்கிய நபர்கள் தனிப்பட்ட முறையிலும் இந்த சீராய்வு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது 100% உறுதி ஆயிற்று என்பது குறிப்பிடதக்கது

Loading...

இதனை அடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக வேறு எங்கும் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கிறது என இஸ்லாமிய அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த மறுசீராய்வு மனுவை அவர்கள் தாக்கல் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Loading...

Trending