Connect with us

#24 Exclusive

கலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி

கலவரம் செய்தது தவறு: மனுவை விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெல்லியில் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா என்ற பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தததைடுத்து அங்கிருந்து பேருந்து ஒன்று மாணவர்களால் தீ வைக்கப்பட்டது. இதனை அடுத்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்

Loading...

இந்த நிலையில் மாணவர்களை தாக்கியது தொடர்பாக போலீசார் மீது அவசர வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. வன்முறை கூடாது என்றும் பேருந்தை தீ வைத்தது தவறு என்றும் எந்த ஒரு போராட்டத்திலும் வன்முறையை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் கூறிய நீதிபதிகள் போராட்டம் நின்றபிறகு தேவைப்பட்டால் இந்த மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்

Loading...

மேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே போலீஸ் இருப்பதாகவும் டெல்லியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கலவரம் செய்தது யார்? அமைதியாக போராடிய யார்? என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றால் போராடுங்கள், ஆனால் அமைதியாக போராடினால் மட்டுமே அந்தப் போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டத்திற்கு எதிராக நீதிபதிகள் தெரிவித்த கருத்து போராட்டக்காரர்களுக்கு பெரும் பின்னர்டைவாகவே கருதப்படுகிறது.

Loading...

Trending