மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக் – உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கிய தமிழக அரசு!

மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக் – உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கிய தமிழக அரசு!

Loading...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் 40 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த நிலையில் தமிழக அரசு மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதற்குப் பலமாக எதிர்ப்பு எழுந்தாலும் அரசு பின் வாங்கவில்லை.

Loading...

இதையடுத்து நேற்று முன் தினம்(மே 7) டாஸ்மாக் கடையை திறந்து தமிழக அரசு 172 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்கே சென்னையில் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று டாஸ்மாக் வருமானம் 122 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் இரு நாட்களில் 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. டாஸ்மாக்குகளில் சமூக இடைவெளி சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதால் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் ‘ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை.’ எனக் கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த மேல் முறையீட்டு மனு அரசியல் தளத்தில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்றும் இன்றும் நடந்தது.

விசாரணையின் முடிவில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் டாஸ்மாக் குறித்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எந்த தடையும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*