குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும், கேரளா கம்யூனிஸ்ட் அரசிற்கு மிக பெரிய ஆப்பு அடித்தது நீதிமன்றம் !!

உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு கேரளத்தை தாண்டி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபஸ்வாமி கோவிலில் ரகசிய அறைகள் திறக்கப்பட்ட போது விலைமதிக்க முடியாத பல்வேறு தங்க வைர நகைகள் கிடைத்தன.

Loading...

இதனையடுத்து பத்மநாபஸ்வாமி கோவிலை கேரளா அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்ததுடன் நிர்வாக பொறுப்பையும் மேற்கொண்டது, இந்த விவகாரம் நீதிமன்றம் செல்ல இடைக்கால தீர்ப்பாக கேரள அரசிற்கு சார்பாக தீர்ப்பு வந்தது.

ஆனால் அதன் பிறகு கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் நியமிக்கப்பட்டதும், கோவில் சொத்துக்களை கேரள அரசு மாநில சொத்து பட்டியலில் சேர்க்க நினைத்ததும் கடும் அதிருப்தியை உண்டாக்க பத்மநாபஸ்வாமி கோவிலை நிர்வகித்து வந்த மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றம் சென்றது.

Loading...

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது அதில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு மேற்பார்வையிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது மேலும்
திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் என்றும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க கேரள மாநில அரசுக்கு உரிமை இல்லை எனவும்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பூஜைகள் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே இந்துக்களுக்கே உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கேரள மாநில அரசிடம் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து – செய்வதாக அறிவித்த நீதிமன்றம் மேற்பார்வையிடும் குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் எனவும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது.

ஐயப்பன் கோவிலில் கேரள அரசு நடந்துகொண்ட விதம் மற்றும் ஆளும் அரசாங்கத்தின் கொள்கை ஆகியவை இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் இந்த முடிவை நீதிமன்றம் எடுத்ததாக கூறப்படுகிறது, பத்மநாபசுவாமி தங்க நகைகள், சொத்துக்களை அரசு கையக படுத்தி நிதி திரட்ட நினைத்த நிலையில் உச்ச நீதிமன்றம் கேரள கம்யூனிச அரசிற்கு தீர்ப்பின் மூலம் ஆப்பு அடித்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3896 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*