பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Loading...

சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்துள்ளது

பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனுவின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், ‘பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது என்றும், பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் என்றும் கூறினார். இதனையடுத்து பொன் மாணிக்கவேல் தரப்பு வாதிட்டபோது, ‘சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது என்றும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்கறை இருந்ததால் என்னை நியமித்து செயல்பாடுகளை கண்காணித்தது என்றும் கூறப்பட்டது.

Loading...

இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை என்றும் கூறினர். மேலும் தமிழக அரசு மீது பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் மனு மீது, எதற்காக பணி நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*