Connect with us

#24 Exclusive

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ! சபரிமலையில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

Published

on

டெல்லி :- நாடு முழுவதும் அயோத்தி தீர்ப்பு எதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறைவில்லாத நிலையில் சபரிமலை தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதனை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் போர்க்களமாக மாறியது, சபரிமலை ஐய்யப்பன் கோவில் சந்நிதானத்திற்குள் பிற மதத்தை சேர்ந்த பெண்களும் செல்வோம் என்று அரசாங்க பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பின்பு பக்தர்களின் கடும் எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் மாநில கம்யூனிஸ்ட் அரசோ எப்படியாவது பெண்களை சபரிமலை சந்நிதானத்திற்குள் அழைத்து செல்வோம் என்று பிடிவாதமாக இருந்தது, மேலும் அதிகாலையில் மாற்று உடையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்களை அழைத்து சென்று சந்நிதானத்திற்குள் சாமி தரிசனம் செய்யவைத்தது.

Loading...

அதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி கோவில் நடையை சாத்தச்சொல்லி அதிரடியாக உத்தரவிட்டார், மேலும் எங்கள் நம்பிக்கையில் யாரும் விளையாட முடியாது என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர், அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பு குறித்து மறுசீராய்வு செய்யவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது, இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Loading...

தற்போது இந்த வழக்கில் கூடுதல் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி உத்தரவுட்டுள்ளனர், இதனால் தற்போது தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அயோத்தி வழக்கை போன்று கூடுதல் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளதால் எப்படியும் இந்து அமைப்புகளுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும் காலத்தில் வெளியாகும் என்பதால்

இந்து அமைப்புகளும் உலகம் முழுவதும் உள்ள ஐயப்பன் பக்தர்களும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற போதும் தற்போது பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்காததால் அதிருப்தியில் உள்ளனர். மேலும் போராட்டம் வெடிக்கலாம் என்பதால் பாதுகாப்பிற்கு போராட்டம் ஏதும் உருவாகாத வண்ணம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending