அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் எதற்காக?

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் எதற்காக?

Loading...

நெல்லை.,

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திட்டமிட்டு ஒரு கும்பல் மத அடையாளத்தை புகுத்தி பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அவரது ஆதரவாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முகம் பொறித்த முகமூடியை அணிந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரது ஆதரவாளர்கள், அமைச்சர் குறித்து மத ரீதியான பொய் பிரச்சாரங்களும் குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது ஒரு குறிப்பிட்ட சமூகம் எதிர்வினையை கிளப்புவதாகவும், இது மத மோதலை உண்டாக்கும் என்றும் ராஜேந்திர பாலாஜியின் உருவத்தை சமூக வலைதளங்களில் தவறாக உருவகப்படுத்தி கருத்து வெளியிட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் அது எதிர் தரப்பிற்கு பாதகமாக முடியும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிராக பேசிவிட்டார் என்று SDPI கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*