பல நாள் சதி சிக்கியது சன் நிறுவனம் தடை விதிக்கப்படுமா? 

பிரதமர் நரேந்திர மோதி குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்து சன்  நிறுவனம் சிக்கியிருப்பது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பொய் செய்திகளை பிரதமரை குறிவைத்து வெளியிடுவதாக சன் நிறுவனம் மீது சொல்லப்பட்ட குற்றசாட்டுகள் தற்போது அவர்கள் செயல்பாட்டின் மூலம் வெளிவந்துள்ளது.

Loading...

இந்த பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கப்ட்டு வருவதாக அவர் கூறினார்.

அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் எனவும்

Loading...

இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து அகல்விளக்குகள் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார் இதற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு தரப்பிலும் விவாதங்கள் எழுந்துள்ள, நிலையில் சமூகத்தில் நடுநிலையை வெளிப்படுத்த வேண்டிய செய்தி நிறுவனமான சன் தொலைக்காட்சி தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளது.

தனது சமூகவலைத்தள பக்கமான அதிகார பூர்வ  முகநூல் பக்கத்தில்  இப்படி ஒரு பிரதமரை வைத்துக்கொண்டுதான் சீனா சதி என்கிறார்களா என பதிவு செய்துள்ளனர், இதன் மூலம் ஒரு தனியார் தொலைக்காட்சி வரம்பு மீறி கட்சியினர் போன்று விமர்சனம் செய்துள்ளது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நீண்ட நாட்களாக சன் நிறுவனம் பிரதமர் மோடிக்கு எதிரான நபர்களை பணியில் அமர்த்தி திட்டமிட்டு தமிழக மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குவதாக பல நாட்களாக இருந்த குற்றசாட்டு வெளிவந்துள்ளது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர், மேலும் 37 tv சேனல்கள் வைத்துள்ள ஒரு நிறுவனம் டீவி சேனல் என்ற போர்வையில் அமர்ந்து கொண்டு அதைத் தாண்டி பல முறையற்ற வேலைகளைச் செய்வதாகவே கருதுகிறேன். எச்சரிக்கை தேவை. தகுந்த கண்காணிப்பு அவசியம் என மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் உடனடியாக சன் தொலைக்காட்சி நிறுவனம் மீதும் வரம்பிற்கு மீது பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரண்டு  மலையாள செய்தி நிறுவனங்கள் மீது கடந்த மாதம் 48 மணி நேரம் தடைவிதித்தது போன்று சன் செய்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.

மேலும் பல நிறுவனங்கள் செய்தி தொலைக்காட்சி என்ற பெயரில் போலி செய்திகளை வெளியிடுவதும் அதை போலி fact check இணையதளங்கள் கொண்டு மூடி மறைப்பது குறித்து நேற்றைய தினம் அர்னாப் கோசுவாமி தனது ஊடகத்தில் வெளிப்படையாக வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*