Connect with us

#24 Exclusive

மூன்று ஆண்டுகள் வரை சிறை !சுந்தர வள்ளி தலைமறைவாம் அப்போ சமூகவலைத்தளங்களில் வந்த செய்திகள் உண்மைதானா?

Published

on

சமூகவலைத்தளம்.,

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது பாஜக தேசிய செயலாளர் மற்றும் அதிமுக எம் பி ஆகியோரை தரக்குறைவாக சமூகவலைத்தளத்தில் விமர்சித்தது மற்றும் மதுரை காட்டு நாயக்கர் சமூகம் குறித்து இழிவாக கருத்து பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பல்வேறு புகார்களின் பேரில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தர வள்ளி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் நேற்றைய தினம் புகார் கொடுத்தவர்கள் சார்பில் காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது, இந்நிலையில் சுந்தரவள்ளியை இன்று (02/10/10) அல்லது நாளை காலை காவல்துறையினர் கைதுசெய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது இதனால் சுந்தரவள்ளி தன்னுடைய வீட்டில் இல்லாமல் கட்சியினர் அல்லது முகநூல் நண்பர்கள் வீட்டில் இருந்து முன்ஜாமீன் பெற முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி தரங்கெட்ட வார்த்தைகளை கையாளுவதில் கைதேர்ந்தவர், சமீபத்தில் ஆண் ஒருவருடன் இவர் கெட்டவார்த்தைகளை பிரயோகித்து பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது, மேலும் சமீபத்தில் இவர் விபச்சாரத்தில் இளம் பெண்ணை ஈடுபடுத்தியதாக வெளியான தகவலால் மன உளைச்சல் அடைந்த அவர் இது போன்ற செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நேற்று சமூகவலைத்தள பிரபலம் கிஷோர் தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் மன்றம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார், அப்போது பிரதமரை கொலை செய்வேன் என்று குறிப்பிட்ட சுந்தரவல்லி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

மேலும் சுந்தரவள்ளியின் பேச்சுக்கள் மற்றும் பதிவுகள் சமூகத்தில் இரண்டு சமுதாயத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், பிரதமர் குறித்து அவர் பதிவிட்ட பதிவின் screen shot ஆகியவை மற்றும் மோதலை ஊக்குவிக்கும் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்திடம் “Army friends” இயக்கம் நேற்று புகார் ஒன்றிணை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சுந்தரவள்ளி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக தலைமை செயலாளரிடம் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் விரைவில் சுந்தரவள்ளி கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுந்தரவள்ளி ஆளுநர் கையை வெட்டவேண்டும் என்று பேசியது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும், இதே போன்றதொரு வேறொரு கூட்டத்தில், சுந்தரவள்ளி பேசிய உரையின் மேல் இந்து முன்னணி அளித்த புகாரின் பேரிலும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது
இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் உருவாக்கி, அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முற்படுதல், ஆதாரமற்ற தகவல்களை பரப்பி மத மோதலை உருவாக்குதல், பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் என 153, 153ஏ(1)(எ), 505(1)(பி), 505(1)(சி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருந்தது, இந்நிலையில் சுந்தரவள்ளிக்கு எதிரான குற்றம் காவல்துறை சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் சு.வள்ளிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இரண்டு நாட்களாக சுந்தரவள்ளி சிறையில் இருப்பார் என்று செய்திகள் உலாவந்த நிலையில் தற்போது அது உண்மையாகிவிட்டதாக பேசப்படுகிறது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share