முதல் முறையாக இணையும் அஜித்-சன் பிக்சர்ஸ்? ஒரு ஆச்சரிய தகவல்

முதல் முறையாக இணையும் அஜித்-சன் பிக்சர்ஸ்? ஒரு ஆச்சரிய தகவல்

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’தல 61’ படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் உலா வருகின்றன. ’தல 61’ படத்தையும் ’வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பார் என்று கூறப்பட்டாலும் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தை போனிகபூர் தயாரிக்க மாட்டார் என தெரிகிறது

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ரஜினி விஜய்யை அடுத்து தல அஜித்தின் 61வது படத்தையும் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடன் இணைந்து ராஜராஜசோழன் குறித்த ஒரு திரைக்கதையை விஷ்ணுவர்தன் தயாராக வைத்திருக்கிறார். அந்தப் படத்தில்தான் தல அஜித் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் பொன்னியின் செல்வன் படத்துக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *