விஜய்-சுதாகொஙகாரா திடீர் சந்திப்பு: என்ன நடந்தது தெரியுமா?

விஜய்-சுதாகொஙகாரா திடீர் சந்திப்பு: என்ன நடந்தது தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 65’ படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்க உள்ளது

’தளபதி 65’ படத்தை சுதா கொங்காரா அல்லது லோகேஷ் கனகராஜ் இருவரில் ஒருவர்தான் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யை சுதா கொங்கரா சந்தித்து ஒன்லைன் கதை கூறியதாகவும், அவரிடம் கதையை கேட்ட விஜய் தனக்கு முழு கதையையும் கேட்ட பின்னரே திருப்தியாகும் என்றும் அதனால் ஆரம்பம் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள கதையைக் கூறும்படி கேட்டதாகவும், இதற்கு சில நாட்கள் கால அவகாசம் கேட்ட சுதா கொங்கரா மீண்டும் இந்த வார இறுதியில் விஜய்யை சந்தித்து முழு கதையையும் கூற உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Loading...

சுதா கொங்கரா கூறும் இந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டால் சுதா கொங்கரா தான் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் என்பது உறுதி செய்யப்படும் என்றும் இல்லையேல் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *