Connect with us

#24 Exclusive

திடீரென விழுந்த மோடி பதறிய பாஜகவினர் வைரலாகும் வீடியோ ! நடந்தது என்ன?

கான்பூரில் கங்கையாற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் பிரதமர் இன்று ஆய்வு செய்தார்.கங்கையாற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 20ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆற்றோரங்களில் கழிவுகளைப் போடுவதைத் தடுப்பது, உயிரிப் பன்மயம், காடுவளர்ப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியன இதில் அடங்கும்.
உத்தரக்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, உ பி முதல்வர் யோகி ஆதித்யானத்துடன் சென்று ஆய்வு செய்தார் .

சந்திரசேகர ஆசாத் பல்கலைக்கழகத்துக்கு ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் அங்கிருந்து கங்கையாற்றுக்குச் சென்று பார்வையிட்டு அதன் பிறகு மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோடி படி ஒன்றில் ஏறும் போது எதிர்பாராத விதமாக கால்தவறி கீழே விழுந்தார். உடனடியாக பாதுகாப்பு காவலர்கள் உதவு வதற்கு முன் மோடி மீண்டும் எழுந்து நின்று நடந்து சென்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Trending