நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கையில் கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம். சபாநாயகர் அதிரடி உத்தரவு !

நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரா இருக்கிறார் இந்த சூழலில் கர்நாடக சபாநாயகர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார், இது கர்நாடக அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பது நாளை தெரியும்.

Loading...

கர்நாடகா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – குமாரசாமி கூட்டணி அரசு தோல்வி அடைந்தது அதனை தொடர்ந்து குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் . இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை எடியூரப்பா உரிமை கோரினார், அதன்பிறகு ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். நாளை (திங்கள் )எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நிரூபிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Loading...

அதன்படி 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே முன்பு அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சபாநாயர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது மேலும் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், மொத்தமாக 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் 17 எம் எல் ஏ கள் கலந்துகொள்ள முடியாது இருப்பினும் தற்போது பாஜகவின் பலம் 105 ஆகவும் 2 சுயேட்சைகள் சேர்த்து 107 ஆக உள்ளது அதேநேரம் அரசிற்கு எதிராக 99 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிந்தது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும். அல்லது இங்கு கிளிக் செய்யவும்

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*