சுப்ரமணியசாமியும் ஆதரவாக களத்தில் இறங்கினார் எடப்பாடி திட்டம் அம்பலமாகிறதா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை பரப்புபவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவினை வெளியிடும் இந்து அமைப்பினர் மீதும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்வதும் அவர்களை கைது செய்வதும் தமிழகத்தில் அதிகரித்திருப்பது இந்து சமூகத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Loading...

டெல்லியில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் இதுவரை தமிழகத்தில் 91 % கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இது குறித்து சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தனது யூடுப் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு கொரோனா தொற்றை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பரப்புகிறார்களா? என்ன தொடர்பு என்பது குறித்து பதிவு செய்திருந்தார்.

அவர் தனது வீடியோவில் காவல்நிலையத்தில் பதிவு செய்யபட்ட புகார்களின் அடிப்படையில் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார், இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நெல்லையில் மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது, இதன் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த பிரிவுகள்தான் பெரும்பாலான தரப்பினரை சந்தேகம் அடைய செய்துள்ளது.

Loading...

சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்தால் கூட நீதிமன்றம் சென்றால் நிற்காத புகாரின் மீது ஜாமினில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன, இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் ஆதரவினை பெறுவதற்காக நடைபெறும் முயற்சியா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் சுப்ரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மாரிதாஸ் விளக்கம் அளித்த தகவலை பகிர்ந்துள்ளார் அதில் நீதிமன்றம் சென்றாலும் வழக்கு நிற்காது எனவும் தெரிவித்துள்ளார், இந்நிலையில்தான் இந்து முன்னணி தலைவர் நேற்று அளித்த பேட்டியில் இந்த அரசு யாரை திருப்தி படுத்த மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்கிறது என்று கேள்வி எழுப்பியிருப்பதும் சந்தேகத்தை உறுதி படுத்தியுள்ளது.

இந்து முன்னணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது இந்துக்களின் மண் என்று தெரிவித்த அதிமுகவின் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கருத்து அவரது சொந்த கருத்து என்றது, அவரது வாகனம் தாக்கப்பட்ட போது வாய்திறக்காமல் எடப்பாடி வேடிக்கை பார்த்தது, தொடர்ந்து இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்சி பதவி பறிப்பு ஆகியவை எடப்பாடி சிறுபான்மையினர் மக்களை கவருவதற்கு இந்து இயக்க ஆதரவாளர்கள் மீது நடவடிக்கையை திருப்புகிறாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும் குரல்கள் மெல்ல மெல்ல பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக உருவாகி வருவது அடுத்த தேர்தலில் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்று முன் மொழிந்தவர்களே இப்போது தேவையில்லை என ஒதுங்கி இருப்பது இதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

மரிதாஸிற்கு பல தரப்பிலும் இருந்து ஆதரவுகள் அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான சுப்ரமணியசாமியும் களத்தில் இறங்கியிருப்பது எதிர் தரப்பினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*