Connect with us

#24 Exclusive

அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மதமாற்ற தடுப்பு மசோதா ! என்ன மாற்றங்கள் அதிரடி திட்டத்தை தெரிவித்தார் சுப்ரமணிய சாமி !! 

ஏன் இந்தியாவிற்கு மதமாற்றம் தடுப்பு சட்டம் தேவை என்றும், இதுவரை பல உலக நாடுகளில் மதமாற்றத்தால் எவ்வாறு மாற்றங்களையும் சொந்த கலாச்சாரங்களையும் இழந்துள்ளன என்றும் தற்போது தான் பாராளுமன்றத்தில் அதற்காக என்ன செய்ய போகிறேன் என்பது குறித்து கல்லூரி மாணவர்களிடையே தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி.

தமிழகத்தில் மற்றும் தென் இந்திய மாநிலங்களில் உள்ள இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்ற அயல் நாடுகளில் இருந்து பணம் பெருமளவில் வருகிறது மேலும்  இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவும் அந்நிய நாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று கூறியுள்ள அவர் இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் தனி நபர் மசோதா தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அகமதாபாத் இன்டஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்  மாவட்ட கலெக்டர்  அனுமதி இல்லாமல் மதம் மாற்ற.சான்றிதழ் கொடுக்க கூடாது  என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்  மதம் மாற உள்ளது குறித்து கலெக்டர்  முறையான விசாரணை நடத்த வேண்டும்.எனவும் பணத்திற்காக மதம் மாறுவது தெரிந்தால் மதம் மாற அனுமதி தரக்கூடாது என்றும் கூறினார்.

Loading...

கடந்த 600 ஆண்டுகளில் இஸ்லாமிய படையெடுப்பு  மற்றும் 200 வருடங்கள் கிறிஸ்தவ  மிஷினரிகளுக்கு எதிராக இந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜீராஷ்ட்ரா மதம் பூர்வீகமாக கொண்ட பெர்ஷியா நாடு தற்போது 100% முஸ்லிம்நாடாகவே  மாறி விட்டது, அதே போல்  பாபிலோன் 17 ஆண்டுகளிலும்
மெசபடோமியா 21 ஆண்டுகளில் இஸ்லாமிய நாடாக மாறி விட்டன எனவும்.,

Loading...

கிறிஸ்தவர்கள் இல்லாத ஐரோப்பிய மக்களை 50 ஆண்டுகளில் 100% கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி விட்டார்கள்.ஆனால் நம்  இந்தியாவில் தான் 600 வருடங்கள் இஸ்லாமிய சக்திகளுக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவ சக்திகளுக்கும் எதிராக போராட்டம் நடத்திய இந்துக்கள் இன்று வரை 82% இந்துக்களாவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

இதற்கு  அர்த்தம் என்ன? இந்துக்களுக்கு உலகம் முழுவதும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது, இந்த உலகம் இந்தியா பாரம்பரிய இந்து நாடு இல்லை என்றும் வேறு இந்தியா என்று நம்  இந்துக்களை நம்ப வைக்க முயற்சி செய்துவருகின்றனர், ஆனால் நம்முடைய தேசிய அடையாளம் ஒன்று தான். பண்பாடு ரீதியாக நாம் அனைவரும் ஒன்று தான்…பிரிட்டன் பிரதமர் கூறுகையில்,…
இங்கிலாந்து ஒரு வெள்ளைக்கார கிறிஸ்தவ நாடு என்று கூறியுள்ளார்,  அதுபோல் இந்தியாவும் இந்து நாடு தான் என பேசினார்.

சுப்ரமணிய சாமியின் தனி நபர் மசோதா மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மதமாற்றம் தடுப்பு சட்டம் குறித்து ஆழம் பார்க்கும் செயல் என்று கூறப்படுகிறது, இதன் மூலம் மக்களுக்கு எந்தெந்த கட்சிகள் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டும் என்றும், நாடாளுமன்ற அடுத்த கூட்ட தொடர் இன்னும் பல புயலை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending