தன்னை கழட்டி விட்டு சென்ற காதலிக்கு, நூதன முறையில் தண்டனை கொடுத்த காதலன்.

நடிகர் தனுஷ் நடித்து திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற படம் “தேவதையை கண்டேன்” , அந்த படத்தில் தனுஷ் ஒரு பெண்ணை காதலிப்பார், ஆனால் அந்த பெண்ணோ பணக்கார மாப்பிளையை பார்த்ததும் தனுஷை கழட்டி விட்டு சென்றுவிடுவார். அதனால் மனமுடைந்து போன தனுஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து தனது தரப்பு நியாயத்தை பெறுவார். படத்தில் வந்த இந்த காட்சியை போலவே சென்னை மதுரவாயலிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Loading...

மதுரவாயலை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற கீரிப்புள்ளை, இவருக்கு வயது 23,மெக்கானிக் தொழில் பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நல்லா குடித்துவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து, என்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றிவிட்டால், அதனால் அவள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இவன் குடிபோதையில் வந்து உளறிக்கொண்டிருக்கிறான் என்று போலீசார் அவனது பேச்சை பெரிதும் பொருட்படுத்தவில்லை.அதனால் ஒருகட்டத்தில் அந்த இளைஞன் தனது பாக்கெட்டில் இருந்து பிளேடை எடுத்து தனது கையை அறுத்துக்கொண்டு, ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தான்.

ஆனால் அதனையும் போலீசார் கண்டுகொள்ளாதலால், மனமுடைந்த அந்த வாலிபர், சாலையின் நடுவே நிறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனை பார்த்த போலீசார், அந்த பையனை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து, சமாதானப்படுத்தினர். பிறகு அந்த வாலிபரிடம் விவரத்தை கேட்டறிந்தனர்.அதில், நானும் ஒரு பெண்ணும் 2 வருடங்களாக காதலித்தோம், அவளுக்காக நான் இதுவரை 3000 ரூபாய் சிலவு செய்துளேன், ஆனால் இப்போது அவள் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி சென்றுவிட்டார், அதனால் நான் அவளுக்காக சிலவு செய்த 3000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொடுங்கள் என்று சொன்னார்.

Loading...

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம், போதை தெளிந்து காலையில் திரும்பிவா, அதன்பிறகு இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ளாத வாலிபன், அவள் வீட்டு முன்பு நின்று நியாயம் கேட்க போகிறேன் என்று சொல்லி அங்கிருந்து சென்றான். காதலிக்கு சிலவு செய்த பணத்தை வாங்கித்தருமாறு ரகளை செய்த அந்த இளைஞனால் அந்தப் பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2667 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*