Connect with us

சர்ச்சைகள்

கலவரத்தை தூண்டிவிடசென்ற சுந்தரவள்ளி? நான் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி கடும் சாடல் !!

சென்னை :- வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் CAA விற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடைபெற்றது அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இணை கமிஷனர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட முயன்ற 40 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன, சொல்லி வைத்தாற்போல் காவல்துறை தடியடி நடத்திய அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் ஆண்கள் என சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து சுந்தரவள்ளி போன்ற பலரும் வண்ணாரப்பேட்டை பகுதிக்கு சென்று மிகவும் தர குறைவான வார்த்தைகளில் காவல்துறையை விமர்சனம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் சுந்தரவள்ளி AC தினகரனை கைது செய்யவில்லை என்றால் மிக பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என வீடியோ வெளியிட்டிருந்தார், இந்நிலையில்தான் பலரும் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கலவரம் குறித்து கேள்விகளை எழுப்பு கின்றனர் நள்ளிரவில் சென்னையின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது எப்படி, திருச்சியில் நள்ளிரவில் பெண்கள் ஆண்கள் என கூடியது எவ்வாறு, சுந்தரவள்ளி போன்ற இரண்டாம் நிலை பேச்சாளர்கள் உடனடியாக களத்திற்கு வந்தது எப்படி எனவே இது டெல்லி போராட்டம் போன்று திட்டமிட்டு ஏற்பாடு செய்யபட்டதா என சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

Loading...

இதற்கிடையில் இன்று தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மிகவும் கடுமையாக காவல்துறை அதிகாரிகள் மீது பொய் குற்றசாட்டுகளை பரப்புவதாக குற்றம் சுமத்தியவர், 1000 பேர் சேர்ந்து கையில் லத்தி இல்லாமல் நிர்கதியாக நின்ற காவலர்களை தடுப்பு வேலியை தாண்டி தாக்க வருகிறார்கள், இணை ஆணையரை தாக்கியதாக குறிப்பிடுகிறார் இத்தனையும் செய்துவிட்டு காவல்துறை தடியடி நடத்தியதாக பலி போடுகிறார்கள்.

Loading...

அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தில் என்னை போன்றோர் அங்கு இருந்திருந்தால் நடப்பது வேறு என மிகவும் வேதனையுடன் பேசினார் , தமிழகத்தில் ஆம்பூரை தொடர்ந்து நேற்றும் காவலர்களை தாக்க இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில் மதம் கலவரத்தை உண்டாக்க சிலர் திட்டமிட்டு இருப்பதாகவும் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending