Connect with us

#24 Exclusive

சொந்த சரக்கை வைத்து வியாபாரம் செய்யுங்கள் கிழித்து தொங்கவிட்ட ராஜ்கிரண் சொன்னாரே கடைசியில் ஒரு வார்த்தை !!!

தமிழக அரசியல் கட்சி தலைவர்களையும் குறிப்பாக விடுதலை புலிகளின் தலைவன் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் அரசியலில் ஈடுபடுவோரை வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகர் ராஜ் கிரண், சமீப காலமாக தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியலில் பேசுவது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ராஜ்கிரண் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் என் அன்பு வேண்டுகோள். ஈழத்தமிழர் பிரச்சினைகளையும்,மறைந்த தேசியத்தலைவர், பிரபாகரன் அவர்களின் பெயரையும் பயன்படுத்தாமல், உங்கள் சொந்த சரக்கை வைத்து அரசியல் வியாபாரம் செய்யுங்கள்… அது தான்,இன்று ஈழத்தில், கையிழந்து, காலிழந்து, வீடிழந்து,
உற்றார் உறவினர்களை இழந்து,
காணி கரைகளை இழந்து,கற்பிழந்து, மனம் பிறழ்ந்து,நடைப்பிணங்களாய் குமுறிக்கிடக்கும், அந்த மானமுள்ள மக்களுக்கு நீங்கள் செய்யும்
பெரிய உதவியாக இருக்கும்…

மற்றவர்களுக்கு உதவாவிட்டாலும்,
உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூடவா உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
நீங்கள் இங்கு அவர்களைப்பற்றிப்பேசும்
ஒவ்வொரு வார்த்தையும், அந்த மக்களுக்கு, பெரும் தீங்காய் அமையும் என்பது கூடவா
உங்களுக்கு தெரியாது.

Loading...

தமிழக அரசியல்வாதிகளால்,
அந்த மக்களுக்கு, எந்தக்காலத்திலும்,
எந்த நன்மையும் செய்ய முடியாது
என்பது மட்டுமே நிதர்சனம் இவ்வாறு தனது கருத்தின் மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகர் ராஜ்கிரண், ஈழ தமிழர்கள் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் குறிப்பாக சீமான், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பேசிவருவது இலங்கையில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தமிழர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.

Loading...

இனிமேலாவது இவர்கள் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யாமல் தங்கள் சொந்த சரக்கை வைத்து வியாபாரம் செய்வார்களா என்பதனை காலம்தான் பதில் சொல்லவேண்டும், இதற்கு முன்னர் ஒருமுறை ராஜ்கிரண் சீமான் பிரபாகரனை சந்தித்தது குறித்து சீமானிடம் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending