Connect with us

#24 Exclusive

கோவில் சிலை திருட்டிற்கு பின்னால் இத்தனை சம்பவங்கள் நடக்கிறதா? அப்போ சொன்னது எல்லாம் உண்மையா?

தமிழகத்தில் பெரும்பான்மையான கோவில் சிற்பங்கள் திருடு செல்வதற்கு பின்னால் மிக பெரிய சதித்திட்டமே இருக்கிறது எனவும் இந்துக்கள் அடையாளத்தை மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதே பிரதான நோக்கம் என்று விளக்கியிருக்கிறார் ராஜா சங்கர் அவர் எழுதிய கட்டுரை பின்வருமாறு :-

நம்முடைய கோவில் சிற்பங்களையும் தெய்வ ரூபங்களையும் திருடி செல்வதைபற்றி செய்திகளில் பார்த்திருப்போம் அதிலே பல விஷயங்கள் நடந்தது பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அதை சர்வதேச கடத்தல் கும்பல்கள் செய்கின்றன என்பதை பற்றியும் சிலர் அறிந்திருக்கலாம். அதை தெரிந்து கொள்ள சிலைத்திருடன் என ஒரு புத்தகமாகவே விஜயகுமார் எழுதியதை தமிழிலே பி ஆர் மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த பதிவு அதைப்பற்றியது அல்ல. சிலைத்திருட்டை சுற்றிய அரசியல் பற்றியதும் அல்ல. ஏன் வெளிநாட்டினருக்கு நம்முடைய சிற்பங்கள் மீதான மோகம் என்பதை பற்றியது. அவர்களுக்கு அதிலே என்ன கிடைக்கிறது? யார் என்ன பலன் அடைகிறார்கள் என்பதை கலாச்சார சமூகவியல் பார்வையாக பார்ப்பது.

நம்முடைய சிற்பங்களை கடத்திக்கொண்டு போய் திருடிக்கொண்டு போய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் மற்றைய மேற்கத்திய நாடுகளின் மீயூசியங்களிலும் கண்காட்சிக்கும் வைத்து என்ன பார்க்கிறார்கள் என்பது நமக்கு புரிய வேண்டும் அப்போது தான் இந்த திருட்டை அடிப்படையிலே கிள்ளி எறிய முடியும்.
இது பல வகையிலே வேலை செய்கிறது. நம்முடைய பழமையை அழிப்பதிலே இருந்து நம்முடைய நவீனத்தை அவர்கள் சொந்தம் கொண்டாடுவது வரை இது வேலை செய்கிறது. நம்முடைய பழமையை அழிப்பது அப்படீன்னா எதுக்கு அழிக்கனும் அதிலே அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்றால் அந்த காரணம் மிக எளிது.

Loading...

இந்த இந்துக்களுக்கு இரண்டாயிர வருட மூன்றாயிர வருட கோவில் இருப்பதால் தானே மதம் மாற மாட்டேன் என்று சொல்வதோடு மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் போய் மதம் மாற சொல்கிறார்கள்? அந்த கோவில் சிற்பங்களை திருவுருவங்களை எடுத்துகொண்டு வந்துவிட்டால் அவர்களுக்கு வரலாறு ஏது? அதோடு அந்த கோவில்கள் எல்லாம் கல்லும் மண்ணும் என்றாகிவிடும் அதான் உள்ளே தெய்வத்திருவுருக்களே (சாமி சிலைகள் ) இல்லையே? கோவில்களை இடிப்பது எளிதே?

Loading...

அப்போ அங்கே எல்லாம் இப்படி இரண்டாயிர வருட பழமையான கட்டுமானங்கள் இல்லையா என்றால் இல்லவே இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையே விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்குமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பவற்றை நூற்றுக்குள்ளே அடக்கிவிடலாம்.
நமக்கோ மாவட்டத்துக்கு நூறு இருநூறு கோவில்கள் குகைகள் கட்டுமானங்கள் இருக்கிறது. எனவே அதை சும்மா விடலாமா?
தோற்றுப்போன அடிமை இந்துக்களுக்கு இதெல்லாம் சொந்தமாக இருக்கவிடலாமா? இது தான் முதல் அழிப்பு.

அடுத்தது கலைநயத்தை திருடுவது.
ஐரோப்பிய கலைநயம் என்பது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் கிடையாது. சிற்பங்கள் ஓவியங்கள் என்பதே வெறுமனே சிலை வடிப்பாக இருந்து வந்தது. கல்லிலே கலைநயம் படைத்தல் என்றால் அது இங்கே நம்முடைய புண்ணிய பூமியிலே மட்டும் தான். அப்படியானால் அதை எப்படி விட்டுவைப்பது? திருடிக்கொண்டு போய் அவர்களின் மியூசியத்திலே வைத்து பார்த்து ரசித்தால் தானே சரியாக இருக்கும்? அப்போ தானே அதை பற்றிகைபோன போக்கிலே கண்டதையும் எழுதி வைக்கலாம்.

இதை எடுத்துக்கொண்டு போய் எப்படி அவர்கள் முன்பு வென்ற இடங்களிலே இருந்து எடுத்து சென்றதை வைத்திருக்கிறார்களோ அதே போல நம்முடைய தெய்வத்திருவுருக்களை வைத்து அதற்கு கீழேஇது எட்டுக்கால் பூச்சியை பார்த்து வடிவமைத்தது அது பத்துக்கால் பூரானை பார்த்து செய்தது என எழுதி வைத்து ஒவ்வொரு கணமும் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கமுடியும்.
நிஜமாகவே இவர்கள் அப்படித்தான் எழுதி வைக்கிறார்கள். முடிந்தால் அந்த மியூசிய வர்ணிப்புகளை படித்து பாருங்கள்.
இதற்குமேலான ஒன்று தான் நம்முடைய வரலாற்றுக்கு அவர்கள் உரிமை கொண்டாடுவது. எப்படி இப்போது யோக ஆசனங்கள் எல்லாம் ஐரோப்பாவை பார்த்து காப்பியடிக்கப்பட்டவை என “ஆய்”ராச்சி கட்டுரைகள் எழுதிகொண்டு இருக்கிறார்களோ அது போல

நம்முடைய கோவில்களே அங்கிருந்து தான் வந்தவை என நாளைக்கு வரலாறு எழுதி வைக்கலாம். நம்முடைய கோவில் சிற்பங்களை எடுத்துக்கொண்டு போய் அவர்களின் படுக்கையறையிலே வைத்து ஆகா பார்த்தாயா இந்த இந்துக்களின் தெய்வத்தை தினமும் இழிவுபடுத்துகிறோம் அவர்களை வென்று விட்டோம் என பரப்புரை செய்யமுடியும். இந்த அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். வரலாறு இல்லாத மேற்கத்திய நாடுகள் தனக்கு இல்லாத வரலாறு அடுத்தவனுக்கு எப்படி இருக்கலாம் எனவும் மற்றவர்களின் வழிபாட்டு இடங்கள் எப்படி அழகாகவும் அதிநவீன் சிற்பங்களோடும் இருக்கலாம் எனவும் செய்யும் வேலையே இது. அப்படியானால் இதை ஒரு பெரிய சதித்திட்டம் பலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என சொல்லுகிறேனா என கேட்டால் பொதுப்புத்தியிலே ஆழப்பதிந்திருக்கும் விஷயத்திற்கு பெரிய திட்டமிடல் எல்லாம் தேவையில்லை.

எப்படி என விளக்குகிறேன். இங்கே இருக்கும் சிலரோ பலரோ அமெரிக்காவிலே ஐரோப்பாவிலோ இருக்கும் மற்ற மத வழிபாட்டு இடங்களிலே இருக்கும் கண்ணாடிகள் ஓவியங்கள் சிலைகளை திருடிக்கொண்டு வந்து நம்நாட்டிலே இருக்கும் மியூசியங்களுக்கு விற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்கள். உலகெங்கும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்திருக்கும். நம் நாடும் இந்துக்களும் மிகவும் மோசமான தீவிரவாதிகள் என சித்தரிக்கப்பட்டிருப்போம்.
அந்த கடத்தல் பொருட்களை வாங்கிய மீயூசிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்
இந்துக்கள் எப்படி மோசமானவர்கள் அதனால் தான் இந்த திருட்டுக்களை செய்தார்கள் கட்டுரைகளை எழுதி குவித்திருப்பார்கள்

ஆனால் இதெல்லாம் இப்போது நடந்ததா?
கிடையாது. ஏன்னா அவர்களின் பொதுப்புத்தியிலே இந்துக்கள் எப்படி மதம் மாற்றப்படவேண்டியவர்கள் தானே அவர்களின் வழிபாட்டு இடங்களை என்ன செய்தால் என்ன என்பது ஊறிப்போய் கிடக்கிறது. அதனால் தான் நம்முடைய கோவில் திருவுருக்களை கடத்தல் முறையிலே வாங்கிய எந்த ஒரு மீயூசிய அதிகாரியும் இதுவரை தண்டிக்கபடவில்லை.
இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாதவரை நம்மால் ஏன் இப்படி நம்முடைய கோவில்களை குறிவைக்கிறார்கள் என புரிந்து கொள்ளமுடியாது. இதை போல கோவில்களிலே தொண்டு புரிபவர்களை குறிவைத்து மதம் மாற்றும் வேலையும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது பற்றி தனி கட்டுரையாக எழுதுகிறேன் இப்படிக்கு ராஜா சங்கர். சிலை கடத்தலுக்கு பின்னால் இப்படி ஒரு நாட்டின் கலாச்சாரத்தையே சீரழிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன எனும் போது ஏன் தமிழக அரசு பொன்மாணிக்கவேலை பதவியில் நீடிக்க விடாமல் தடை செய்கிறது இதற்கு யார் காரணம்?

Loading...

Trending