Connect with us

#24 Exclusive

இராமர் கோவில் தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம் ! மேலும் 15 உறுப்பினர்கள் விவரம் வெளியானது ! பெரியாரிஸ்ட்கள் கதறல்

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இராமர் கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது, அதில் சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட இடம் இராமர் கோவிலுக்கே சொந்தம் என்றும், மசூதி கட்ட வேறொரு இடத்தை ஒதுக்கி தீர்ப்பளித்தது, அத்துடன் மூன்று மாதத்தில் இராமர் கோவிலுக்கான அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்கவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் நேற்று பார்லிமென்டில் விவாதத்தின் போது பேசிய பிரதமர் இராமர் கோவில் விரைவில் கட்டுவதற்கு ஏதுவாக அறக்கட்டளை அமைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார், இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் பிரதமரின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பை அளித்தனர், உள்துறை அமைச்சர் அமிட்ஷா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உ. பி முதல்வர் யோகி ஆகியோர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் குழுவில் SC சமூகத்தை சேர்ந்தவர் உட்பட அனைவரும் இடம்பெறுவார்கள் என்று பிரதமர் தெரிவித்த நிலையில் இராமர் கோவில் அறக்கட்டளையில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது,

Loading...

தலைவராக தமிழகத்தை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான பராசரன் செயல்படுவார் என தெரிகிறது.
மேலும், இதன் உறுப்பினர்களாக,

Loading...
  1. ஜகத்குரு சங்கராச்சார்யா ஜோதிஷ்பீததீஸ்வர் சுவாமி வசுதேவானந்த் சரஸ்வதி ஜி மஹராஜ், பிரயாக்ராஜ்.
  2. ஜகத்குரு மாதவச்சார்யா சுவாமி விஸ்வ பிரசன்னதீர்த்தஜி மஹராஜ், பெஜாவர் மடம், உடுப்பி.
  3. யுகபுருஷ் பரமானந்த் ஜி மஹராஜ், ஹரித்வார்.
  4. சுவாமி கோவிந்தேவ் கிரி ஜி மஹராஜ், புனே.
  5. ஸ்ரீ விம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா அயோத்தி.
  6. ஹோமியோபதி டாக்டர் அனில் மிஸ்ரா, அயோத்தி.
  7. ஸ்ரீ கமலேஸ்வர் சவுபால், பாட்னா.

9 மற்றும் 10வது உறுப்பினர்களை அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளவர்கள், ஹிந்து மதத்தை பின்பற்றும் நபரை, பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்வர்.

  1. மகந்த் தினேந்திர தாஸ், நிர்மோகி அஹாரா, அயோத்தி பைதக், அயோத்தி.( நிர்மோகி அஹாரா அமைப்பின் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இவர் நியமிக்கப்படுகிறார்)
  2. மத்திய அரசில், இணை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள, ஹிந்து மதத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமிக்கும்
  3. உ.பி., மாநில அரசில், செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
  4. அயோத்தி கலெக்டர் உறுப்பினராக இருப்பார். அவர் ஹிந்துவாக இல்லாத பட்சத்தில், அயோத்தி கூடுதல் கலெக்டர், உறுப்பினராக இருப்பார்.
  5. ராமர் கோயில் வளாகம் தொடர்பான விவகாரங்களில், நிர்வாகம் மற்றும் வளர்ச்சி கழக தலைவர் ஒருவரை அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமிப்பார். அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருப்பார்கள். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமர் கோவில் தலைவராக நியமனம் செய்யப்படும் பராசரன் நீண்டகாலமாக இராமர் கோவில் வழக்கில் வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பெரியார் மண் என்ற பிம்பத்தை வெளிமாநிலங்களில் உருவாக்கிய நிலையில் தொடர்ந்து மோடி அரசு தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆன்மீகம் தளங்களில் நியமித்து வருவது பெரியாரிஸ்ட்களுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இராமர் கோவில் அறக்கட்டளை தலைவராக தமிழர் நியமனம் செய்யபட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

Loading...

Trending