ஸ்டாலினுக்கு வயசு என்ன இங்கிலிஷ் இந்தி எதுவும் தெரியாது ஆனா இவரு தலைவரா பிரசாந்த் கிஷோர் பேசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் திமுகவினர் அதிர்ச்சி !!

திமுக தலைவர் முக ஸ்டாலினை கடந்த காலத்தில் பிரசாந்த் கிஷோர் மிக மோசமாக நையாண்டியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

திமுக வருகிற சட்டசபை தேர்தலை பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம் உடன் இணைந்து சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது இதற்கு முன்னர் ‘ஐபேக் ‘ அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க., சந்தித்து வெற்றி பெற்றது. பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்காக இந்த நிறுவனம் பணியாற்றியது.

அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக இந்நிறுவனம் பணியாற்றியது.
ஜெகன் மோகன் ரெட்டியும் அபார வெற்றி பெற்று, முதல்வராகியுள்ளார். தற்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்காக இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.

Loading...

இந்நிலையில், 2021ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, அரசியல் களத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் திமுக நிலை மாறுபட்டது, அக்கட்சி பல ஆண்டுகளாக பிராமணர்களை விமர்சனம் செய்தே வளர்ந்துள்ளது, இந்நிலையில் அக்கட்சி வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் எனும் பிராமணரை திமுக அனுக்கிருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர், இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை பேட்டி ஒன்றில் அவருக்கு இங்கிலிஷ் இந்தி எதுவும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர் வைத்துதான் பேசினோம்,

வயசு 64 இல்லை 68 என தெரியவில்லை ஆனால் இன்னும் இளைஞர் அணி தலைவர் பொறுப்பை வைத்திருக்கிறார் என மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த திமுகவினர் இப்படி நம் தலைவரை இகழ்ந்தவர் சொல்வதை கேட்டுத்தான் நாம் வேலை செய்யவேண்டுமா என குமுறி வருகின்றனர், சிலர் வெளிப்படையாக பொதுவெளியில் எழுதியும் தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2700 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*