Connect with us

#24 Exclusive

உள்ளாட்சி தேர்தல் தேதி: மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல திமுக முடிவு

சென்னை :-

உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறும் என சற்றுமுன்னர் தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தல் தேதியை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றம் செல்லவுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது தவறு என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Loading...

நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கவிருக்கும் நிலையில் திடீரென திமுகவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்களன்று வேட்புமனு தொடங்கும் நாளிலேயே திமுக உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுவை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உள்ளாட்சி தேர்தல் நடப்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது

Loading...

©TNNEWS24

Loading...

Trending