நேபாளத்தை தொடர்ந்து இலங்கையையும் கைப்பற்றியது இந்தியா ! ராஜபக்சேவின் அறிவிப்பால் சீனா கடும் அதிருப்தி !!

TNNEWS24 : ஆசியாவின் பெரிய அண்ணன் யார் என்ற போட்டியில் பல காலமாக முன்னணியில் இருந்த சீனாவை மோடி ஒரே ஆண்டில் காலி செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டும், சீனாவின் முத்துமாலை எனும் திட்டத்தை கடந்த ஆண்டு உடைத்த மோடி இந்த ஆண்டு அதன் பட்டுப்பாதை திட்டத்தை உடைத்து விட்டார், அதிலும் ராஜபக்சேவின் அறிவிப்பு சீனாவிற்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

Loading...

இந்தியா சீனா இரு நாடுகளும் ஆசியாவில் உள்ள குட்டி நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எதிரி நாட்டை கட்டுப்பாட்டில் வைக்கவும் நினைத்து செயல்பட்டு வருகின்றன, இதன் அடிப்படையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் இருக்கும் போது சீனா மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் அங்கு தனது துறைமுகத்தை அமைத்தது.

மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கையில் சீனாவிற்கு ஆதரவாக இருந்த ராஜபக்சே அரசாங்கத்தை மாற்றினார் அதனை தொடர்ந்து சிறிசேனா பொறுப்பேற்றதும் சீனாவிற்கு எதிராக துறைமுக ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்படும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Loading...

இதனை தற்போது உறுதி படுத்தியுள்ளார் தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த ராஜபக்சே, இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை கொடுக்க முன்னாள் அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

இந்தியா சீனா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் தற்போது நேபாள் நாட்டில் சீனா ஆதரவு நிலை எடுத்த நேபாள் பிரதமர் சர்மா ஒளி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார், அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு கொழுப்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை அளிக்க இருப்பதாக தெரிவித்து இருப்பது அண்டை நாடுகளை வைத்து இந்தியாவை மிரட்ட நினைத்த இலங்கைக்கு மிக பெரிய அடியாக அமைத்துள்ளது.

உள்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மட்டுமல்லாமல் வெளிநாட்டு அரசாங்ககளை தீர்மானிக்கும் சக்தியாக மோடி வளம் வருவது உலக அளவில் இந்தியாவின் பிம்பத்தை உயர்த்தியுள்ளது .

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*