Connect with us

#24 Exclusive

இலங்கையில் தமிழ் மக்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள், கேவலமான 3 காரணத்தை குறிப்பிட்ட இலங்கை விக்னேஸ்வரன் ! தமிழ் தேசியவாதிகளுக்கு பொளேர் !

Published

on

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும், இலங்கை தமிழ் மக்கள் குறித்து பொய்களை பரப்புவதை தொழிலாக செய்பவர்களுக்கும் மிக பெரிய சவுக்கடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களை குறிப்பாக இந்துக்களை திட்டமிட்டு சில அமைப்புகள் மதமாற்றம் செய்வதாக இந்து அமைப்புகள் பல காலமாக வேதனை தெரிவித்து வருகின்றனர், மதமாற்றத்தால் ஒரு கட்டத்தில் தமிழ் இனமும் கலாச்சாரமும் அழிவதற்கு மிக பெரிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் கூறி வந்த நிலையில்.

Loading...

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலில் தமிழர்கள் 60 % மேல் இருந்தார்கள் முஸ்லிம்கள் 33% சிங்களர்கள் 5 % மக்களும் இருந்தார்கள் ஆனால் தற்போது தமிழர்களின் எண்ணிக்கை 30 % அளவிற்கு குறைந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

Loading...

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு முஸ்லிம்கள் கடன் கொடுப்பதாகவும், வட்டி வாங்குவது தவறு என்று முஸ்லீம் சட்டத்தில் இருந்தும் அவர்கள் வட்டி வாங்குவார்கள், கடன் வட்டி அதிகமாகி கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் தமிழர்களை எங்கள் மதத்திற்கு மாறுங்கள் பணம் தர தேவையில்லை என்று மிக பெரிய அளவில் மதமாற்றம் நடத்துவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் முஸ்லிம்கள் கடையில் வேலை பார்க்கும் தமிழ் பெண்களை திட்டமிட்டே இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்து அவர்களை மதம்மாற்றுவதாகவும் மற்றொரு காரணத்தை தெரிவித்துள்ளார், மேலும் இதுநாள் வரை சிங்களவர்கள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடக்கும் பிரச்சனை என வேடிக்கை பார்த்ததாகவும், தற்போது முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிப்பால் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க நினைப்பதாகவும் மற்றொரு காரணத்தை தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் பெயரை சொல்லி வயிறு வளர்த்தார்களே தவிர இலங்கை மக்கள் வாழ்க்கைக்கு உதவும் படி உருப்படியான காரியங்களை செய்தது இல்லை எனவும், தற்போது தமிழ் இனமே மதமாற்றத்தால் பாதிக்கப்படும் போது தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என பேசி மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுவதை தடுத்து வருவதாக இதற்கு முன்னர் மற்றொரு இலங்கை தமிழர்பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராகவே மாறிவிட்ட சூழலில் தமிழ் தேசியம் பேசும் தமிழகத்தை சேர்ந்த சீமான் திருமுருகன், வேல்முருகன் இன்னும் பிற அரசியல்வாதிகள் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பேச்சு குறித்து வாய் திறப்பார்களா? இல்லை வழக்கம் போல் தமிழர்கள் இந்து இல்லை இந்துவிற்கும் தமிழனுக்கும் தொடர்பு இல்லை என்று பிரச்னையை திசை திருப்புவார்களா என பல்வேறு நபர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending