பூஜை அறையில் யார் விளக்கேற்ற வேண்டும்? அப்படி செய்வதால் என்ன பலன் !!

பூஜை அறையில் யார் விளக்கேற்ற வேண்டும்? அப்படி செய்வதால் என்ன பலன் !!

Loading...

விளக்கு ஏற்றுவதில் மூலம் மிக அதிகமான பலன்கள் உண்டாகின்றது. அதாவது ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் இருக்கும். இந்து மதத்தில் தெய்வத்தை வணங்குவதற்காக விளக்கு ஏற்றுவது ஒரு முக்கியமான வழக்கம் ஆகும். சில வீடுகளில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றுவார்கள். சிலர் மாலை நேரத்தில் மட்டும் தெய்வத் தினை வணங்கி விளக்கேற்றுவார்கள். இன்னும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் மாலை நேரத்தில் விளக்கேற்றுவார்கள்.

சிலர் தினமும் தன் வீட்டில் விளக்கு ஏற்றுவர். அவ்வாறு செய்வதனால் தெய்வத்தின் அருளை வெகு வேகமாக நாம் பெறலாம். விளக்கு ஏற்றும் வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காது. கெட்ட சக்திகள் அந்த வீட்டில் இருப்பின் விளக்கு ஏற்றுவதில் மூலம் அந்த தீய சக்தி நம் வீட்டை விட்டு வெளியே சென்று நேர்மறையான ஆற்றல்களை பெறலாம். விளக்கு ஏற்றுவதின் மூலம் நிறைய பலன்களை நாம் பெற முடியும். பெண் பிள்ளைகள் விளக்கு

Loading...

ஏற்றுவதால் தெய்வங்கள் மட்டுமின்றி நம்முடைய குலதெய்வமும் நமக்கு அருள் புரியும். எனவே வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளே விளக்கு ஏற்ற வேண்டும். அவர்கள் சிறு குழந்தைகளாக இருப்பின் அவர்களது கையினை பிடித்து நாம் விளக்கு ஏற்ற வேண்டும். சிறு குழந்தையே நமக்கு விளக்கு ஏற்றி வணங்குகிறதே என்று தெய்வங்கள் நம் வீட்டிற்கு அனைத்து நன்மைகளும் நடக்க அருள் புரியும். இவ்வாறு பெண் பிள்ளைகளால் ஏற்றப்படும் விளக்கு

உன்னதமானது என சாஸ்திரங்கள் கூறுகிறது. ஒரு வருடம் விளக்கு ஏற்றி நாம் அடையும் பலனை பெண் குழந்தைகள் ஏற்றுவதில் மூலம் சீக்கிரமாக அந்த பலனை அடையலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் அவ்வாறு கூறுகிறது என குறிப்பிடத்தக்கது .இந்த விளக்கினை பூஜை அறையில் அரைமணி நேரமாவது கண்டிப்பாக ஒளிர விட வேண்டும். சிலர் விளக்கு ஏற்றிய சில நிமிடங்களிலேயே அதனை குளிர வைத்து விடுவார்கள். அவ்வாறு செய்வது தவறாகும்.சிறு குழந்தையை விளக்கு ஏற்ற சொல்வதின் மூலம் தெய்வத்தின் அருளை பற்றியும் விளக்கு ஏற்றுவதில் நன்மைகளையும் குழந்தையிலேயே தெரிந்து கொள்ளவர். ஆண்கள் விளக்கு ஏற்றினாலும் பலன்கள் உண்டு. ஆனால் பெண் பிள்ளைகள் ஏற்றுவதன் மூலம் அந்த பலனை நாம் வெகு விரைவில் பெறலாம். இவ்வாறு செய்வதனால் நாம் குலதெய்வத்தின் அருளை வெகுவிரைவில் பெற முடியும்.

எனவே இந்த முறையை பின்பற்றி நாமும் தெய்வம் மற்றும் குலதெய்வத்தின் அருளை விரைவாக பெற்று நலமாக வாழ்வோம். மற்றும் வீட்டில் உள்ள பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலம் இட்டு செம்பு தட்டுகளின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் விளக்கேற்றி பூ வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் உள்ள உறவுகள் நிலைத்தும், பண வரவும், செல்வமும் நிறைந்து, வீடு முழுவதும் சந்தோசம் நிறைந்து காணப்படும். இந்த செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ நீங்கள் தான் பணக்காரர்!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*