தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து!!

Loading...

தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 30 தேதி வரை பொது மக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவு அமுல்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் அதிக பாதிப்புக்கு உள்ள மாவட்டங்களை ஆன சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தீவிர

கண்காணிப்பில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன,
இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் மூலம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் நான்கு சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டன. அவை கோவை -காட்பாடி, மதுரை -விழுப்புரம், திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது தமிழகத்தில் கொரோன

Loading...

பரவல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர தற்போது பிற மாவட்டங்களான மதுரை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்தது. இவ்வேண்டுகோள் படி, இன்று முதல் தமிழகத்தில் இயங்கி கொண்டியிருந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்றும் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ஆறு மாதத்திற்க்குள் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என ரயில்வேத் துறை அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது
மீண்டும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தமிழக அரசு மருத்துவ குழு நிபுணர்களிடம் கலந்து ஆலோசனை செய்து இதன் முடிவைநாளை மக்களுக்கு அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளன.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*