Connect with us

#24 Exclusive

மகனின் முதல் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய சீமான் ! திட்டி தீர்க்கும் தமிழர்கள் உண்மையை மறைக்க முடியுமா?

சமூகவலைத்தளம் :-

சீமான் கயல்விழி தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு, சென்ற வருடம் ஜனவரி 12 ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது, இந்நிலையில் இன்று தனது மகன் ‘மாவீரன் பிரபாகரனின்’ முதல் பிறந்தநாளை குடும்பத்தினர் மத்தியில் எளிமையாக கொண்டாடி சிக்கனமாக நடந்து கொண்டார் சீமான்.

ஆனால் தற்போது ஊரெல்லாம் தமிழ் தேசியம் பேசும் சீமான் தனது மகனுக்கு ஆங்கிலேயே முறைபடி கேக்கு வெட்டி அதை ஆங்கிலத்தில் உற்றார், நண்பர்கள் பாட கொண்டாடியதை பார்த்து, இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாமல் பலரும் கடுமையாக சீமானை விமர்சனம் செய்து வருகிறார்கள், தமிழ் தேசியம் பேசும் சீமான் தனது உறவினர்களுக்கு கூட தமிழ் கற்று கொடுக்கவில்லையா என்றும் அதே நேரம் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பாடுவது இயல்புதான்..,

Loading...

பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் பிறந்தநாளை கூட ஆங்கிலேயன் வழியில் கொண்டாடும் நிலைக்கு என் தமிழ் சமூகம் உள்ளது என்று வேதனை தெரிவித்ததுடன் மற்றொரு கூட்டத்தில் தமிழ் தெரியாமல் தங்கிலீஷில் பேசுபவர்களை திருக்கை வாலு இல்லை பச்சை மட்டையில் சட்டையை கழட்டி முதுகிலே அடித்து பின்பு உப்பை தடவி விட போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார், இதனை வைத்துதான் சீமான் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவினை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Loading...

பிறந்தநாளை ஆங்கிலத்தில் கொண்டாடிய சீமான் உறவினர்களுக்கு பதிலாக சீமானே தான் சொன்ன பச்சை பனைமட்டை அடியை ஏற்று கொள்வாரா என்று கிண்டல் அடித்து வருகின்றனர், இன்னும் ஒரு சிலரோ கடவுள் முருகன், கிருஷ்ணர் உருவப்படங்களை மாற்ற தெரிந்த சீமானுக்கு தன் குழந்தை பிறந்தநாளை முறைப்படி கொண்டாட தெரியாதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமான் மகன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ மற்றும் சீமான் பொது கூட்டத்தில் பேசிய வீடியோவை இணைத்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வரும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் அடடே அண்ணன் மகனின் முதல் பிறந்தநாளை எப்படி வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள் பாருங்கள் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending