Connect with us

இந்தியா

சமூக தொற்று எனும் மூன்றாம் நிலை அபாயம் – இந்தியாவில் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு !

சமூக தொற்று எனும் மூன்றாம் நிலை அபாயம் – இந்தியாவில் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்று எனும் மூன்றாம் நிலை பரவல் இந்தியாவில் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்த கொரோனா வைரஸ் பரவல் மூன்று கட்டங்களாகப் பரவுவதாக சொல்லப்படுகிறது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வைரஸ் தொற்றோடு இருந்தவர்கள் மூலம் பரவும் முதல் நிலை. அடுத்தது அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மூலம் பரவும் இரண்டாவது நிலை. இவை இரண்டுக்கும் அடுத்து அபாயகரமான நிலையாக சொல்லப்படுவது சமூகப் பரவல் எனும் மூன்றாவது நிலை.

Loading...

இந்தியா இன்னும் சமூகப் பரவல் எனும் மூன்றாவது நிலையை எட்டவில்லை என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து  “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதுவரை எந்த சமூக பரவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது” என தெரிவித்தார். 

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending