சென்னையில் நேற்று திடீரென 6 விமானங்கள் ரத்து!! ஏன் தெரியுமா?

சென்னையில் நேற்று திடீரென 6 விமானங்கள் ரத்து!! ஏன் தெரியுமா?

Loading...

இந்தியாவில் கோவிட்-19 தொற்றை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையில் ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு பயணம் செய்ய போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் மக்களின் தேவைக்கேற்ப ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. மற்றும் வெளிநாடுகளில் ஊரடங்கு காரணமாக

இந்தியர்கள் பலர் தன து தாய் நாடு திரும்பி வரமுடியாமல் சிக்கி தவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூடுதலாக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு நடுவில் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு மே மாதம் 25-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில

Loading...

நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்க தமிழக அரசு தெரிவித்தது , சென்னை மற்றும் கோவை, மதுரை உள்பட பிற மூன்று நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது. இருப்பினும் சில விதி கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு பயணிகள் பயணிக்க 14 நாட்கள் தனிமைப்படுத்துல் மற்றும் இ-பாஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று தமிழகம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் மேலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் சென்னையில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளதால் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வருகை, புறப்பாடுகளில் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது. இதில் சிலர் இ-பாஸ் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் விமானங்களில்

போதிய பயணிகள் இல்லாததால்6 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை, கடப்பா மற்றும் விஜயவாடா, ராஜமுந்திரி, வாரணாசி, புவனேஸ்வர், கவுகாத்தி ஆகிய விமானங்கள் ஆகும். மற்றும் இந்தியாவில் நேற்று மட்டும் 54 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*