அடடா அதுதான் வேகமாக வந்து கருத்து சொன்னாரா கார்த்தி? சிவக்குமார் குடும்பமே மோடியை எதிர்க்க காரணம் என்ன தெரியுமா?

நடிகர் சிவகுமார் குடும்பம் என்றால் ஒரு காலத்தில் மிகவும் மதிக்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் பலரும் தங்கள் ஆதரவை அவர்களுக்கு வழங்கி வந்தனர், குறிப்பாக கொங்கு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிவகுமார் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி தேதிகளை மாற்றிய வரலாறும் உண்டு.

Loading...

அப்படி இருந்த சிவகுமார் குடும்பம் தற்போது அனைத்து தரப்பிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது, இதில் சிவகுமார் குடும்பத்தில் இருந்து அரசிற்கு எதிராக கருத்து சொல்லாதது இருவர் மட்டுமே ஒன்று அவருடைய மகள் மற்றொருன்று அவருடைய மனைவி இவர்களை தவிர அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து விட்டனர்.

சிவகுமார் குடிக்க தண்ணி இல்லாத போது செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்புவது முக்கியமா என கேட்டார், சூர்யா நீட் தேர்வு என்பது எதற்கு என கேள்வி எழுப்பினர், ஜோதிகா கோவில்களுக்கு செலவு செய்வதற்கு பதில் பள்ளிகளை சுத்தமாக வைத்து கொள்ளலாம் என தெரிவித்தார் அதன் பிறகு இப்போது கார்த்தி விவசாயிகளுக்கு பாதிப்பு என்பதாக கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு EIA 2020 சட்ட வரைவை எதிர்த்துள்ளார்.

Loading...

இவர்கள் குடும்பமாக மத்திய அரசை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய சூழலில் முதல் காரணம் வெளிவந்துள்ளது, மத்திய அரசு நீட் தேர்வு என்ற ஒன்றை கொண்டுவருவதற்கு முன்பு 12 -ம் வகுப்பில் பெரும் இறுதியாண்டு மதிப்பெண்களே மருத்துவம் சேர்வதற்கு தகுதியாக இருந்தது.

இதனால் நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் பல லட்சம் (20 லட்சம் வரை ) பெற்றுக்கொண்டு பள்ளியில் மாணவர்களை சேர்த்து மிக பெரிய தேர்ச்சியை காண்பித்தனர், மாநில அளவில் இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே அதிகம் மருத்துவ துறையில் கால் பதிப்பர் இங்கு படிக்கும் பிள்ளைகள் பெருன்பாலும் கோடீஸ்வரர்கள் வாரிசு ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்து ஒட்டுமொத்தமாக மாற்றியது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் 12 ம் வகுப்பினை வைத்து கோடி கோடியாக சம்பாரித்தது அடிபட்டு போனது, இதில் சிவகுமார் குடும்பமும் ஒன்று என கூறப்படுகிறது, சிவகுமார் குடும்பம் இது போல் அங்கு பல பள்ளிகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது, மோடி கொண்டுவந்த நீட் தேர்வு மூலம் ஆண்டிற்கு சிவகுமார் குடும்பத்திற்கு பல கோடி இழப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்துதான் சிவகுமார் முதல் முறையாக விவசாயம், குடிக்க தண்ணி இல்லை நமக்கு இப்போது செவ்வாய் கிரகத்திற்கு சாட்டலைட் ஒரே கேடா என முதல் விமர்சனத்தை வைத்தார், அதன் பிறகு சூர்யா நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசை கண்டித்தார், மோடி தான் எடுக்கும் திட்டங்கள் குறித்து நீண்ட தெளிவான பார்வையை முன்வைத்தே பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறார்.

ஆனால் தங்கள் வருமானம் போவதற்காக பலர் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர் அதில் சிவகுமார் குடும்பமும் ஒன்று, மேலும் ஜோதிகாவின் அக்கா நக்மா கொடுக்கும் பல்வேறு பணிகளை சிவகுமார் குடும்பம் செய்து வருவதாகவும், இவர்களுக்கு தாவூத் இப்ராஹிடம் இருந்து பல படங்களுக்கு முதலீடு நக்மா மூலமாக வருவதாக இதற்கு முன்னர் பாலசுப்பிரமணியன் ஆதித்யன் கருத்து கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பெரு முதலாளிகளுக்கு வர வேண்டிய வருமானத்தை மோடி தடுத்தால் எதிர்க்கத்தானே செய்வார்கள் அதுதான் கார்த்தியும் இப்போது எதித்திருக்கிறார் போல !!!

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*