நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்

Loading...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இயக்கர் நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரோடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’ஹீரோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ’டாக்டர் ’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

Loading...

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகி உட்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நிலையில் இந்தப் படம் நண்பர்கள் இணைந்து உருவாக்கும் ஒரு படமாக உருவாக உள்ளது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*