சார் நீங்க சொன்ன மாதிரி வருத்தம் கேட்கமுடியாது என சொல்லிட்டாரே அப்படியா மீண்டும் கதறும் திருமா ! இதை எதிர்பார்க்கிறாராம் !!

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்திற்கு மன்னிப்போ வருத்தமோ கேட்கமுடியாது என அதிரடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Loading...

துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதை ஆகிய இந்து கடவுள்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக பேசினார்.

இது உண்மைக்கு மாறான தவறான தகவல் என்று எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

Loading...

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பேசிய ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை திருவல்லிக்கேணி, சேலம், ஈரோடு, மேட்டூர், புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களிலும் காவல் துறையில் புகார் அளித்தனர், மேலும் வருகிற 23- ம் தேதி ரஜினி வீட்டினை முற்றுகையிடப்போவதாக கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில் காலையில் செய்தியாளர்களை சந்தித்து நான் கூறிய கருத்து 100% உண்மைதான் இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல, மறக்க கூடிய சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் செய்தியாளர் ஒருவர் திருமாவளவன் நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்று கேள்வி கேட்க., அதற்கு சாரி நான் ஆதாரத்துடன் பேசினேன் மன்னிப்பு கேட்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அதிரடி கருத்தினை தொடர்ந்து திராவிட கழகத்தினர் கதறிவருகின்றனர், நாங்கள் ராமரை அவ்வாறு செய்யவில்லை என்றும் வழக்கத்திற்கு மாறாக இந்து மதம் கடவுளை அவமானம் படுத்தவில்லை என்று ஒரு பேட்டியின் மூலம் தங்கள் காலம் காலமாக கொண்டுவந்த இந்து மதம் எதிர்ப்பு கொள்கையை மாற்றி வந்தது பலரையும் ஆச்சர்யத்திற்கு ஆழ்த்தியுள்ளது.

திருமாவளவன் இது குறித்து கருத்து தெரிவித்தபோது பெரியார் தொடர்பாக திரு ரஜினிகாந்த் கூறிய கருத்து வரலாற்று பிழை என்று எடுத்து கூறினோம், அவரை மன்னிப்பு கேட்க கூறினோம், ஆனால் அவர் வருத்தம் தெரிவிப்பதும் வருத்தம் தெரிவிக்காததும் அவரது உரிமை நாங்கள் அதனை கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் அவர் வருத்தம் தெரிவிப்பதுதான் நாகரிகமான அரசியல், பெரியார் ராமர், கிருஷ்ணரை பெரியார் அவமதித்தார் அவரே அடித்தார் என்று கூறுவது வரலாற்று தவறு.

சங்கபரிவார் அமைப்புகள் கூறுவதை ரஜினி எதிரொலிப்பது மிகவும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினி தெளிவாக நான் மன்னிப்போ வருத்தமோ கேட்க முடியாது என ஆதாரத்துடன் தெரிவித்தபோது மீண்டும் வருத்தம் தெரிவிப்பது நாகரிகமான அரசியல் என வலியுறுத்தியுள்ளார்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*