ரசிகர்களை குஷிப்படுத்த கல்யாண அழைப்பை போல கோப்ரா படத்தின் கலர்ஃபுல் அப்டேட்!!

ரசிகர்களை குஷிப்படுத்த கல்யாண அழைப்பை போல கோப்ரா படத்தின் கலர்ஃபுல் அப்டேட்!!

Loading...

தென்னிந்திய திரைத்துறையில் பிரபல முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் சியான் விக்ரம். இவருடைய இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர் ஆகும். நடிகர் விக்ரம் படங்கள் ஒவ்வொன்ருமே அவரை சினிமா துறையில் தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்திற்கு பிறகு விக்ரம் அவருடைய மகன் துருவ் இணையும் முதல் படத்தை இயக்குகிறாரர்.

இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு திறவு கோல் மந்திரவாதி’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள போது, ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 12 தோற்றங்களில் தற்பொழுது நடிகர் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் கோப்ரா ஆகும். இப்படத்தில்

Loading...

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். மற்றும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி மற்றும் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகும்.முதல் முறையாக விக்ரம் 12 வேடங்களில் நடித்து வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்த ஒன்று. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்

போஸ்டரில் விக்ரம் 7 கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர் வெளியானது. திரைப்படத்தை எதிர்ப்பார்த்து கொண்டுயிருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஏமாற்றமாக, படப்பிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு காரணம் கொரோன வைரஸ் தொற்றால், ரஷ்யாவில் நடந்து வந்த படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீண்டும் இப்படத்திற்கான கடைசி

படப்பிடிப்புகள் சூழ்நிலை சரியான பிறகே ரஷ்யாவில் படப்பிடிப்புகள் எடுக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் சிங்கிள் ‘தும்பி துள்ளல்’ பாடல் வரும் 29ம் தேதி, தினம் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

இப்பாடலுக்கான அழைப்பிதழை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அழைப்பிதழ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*