ஒரே கையெழுத்து திமுகவிற்கு 240 கோடி நஷ்டம் கதறி துடிக்கும் மேலிடம் !!

ஒரே கையெழுத்து திமுகவிற்கு 240 கோடி நஷ்டம் கதறி துடிக்கும் மேலிடம் !!

Loading...

கொரோனா மூலம் இந்திய பொருளாதாரம் மிக பெரிய மந்த நிலையை நோக்கி செல்லும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு முறியடிக்கலாம் என மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அதில் ஒன்றுதான் மத்திய அமைச்சரவை கொண்டுவந்த அவசர தீர்மானம்.

மத்திய அரசு எம்பிக்களின் நிதி இரண்டு வருடங்களுக்கு ரத்து என்று அறிவித்தவுடன் நாட்டில் வேறு எங்கும் எதிர்ப்பு இல்லை ஆனால் தமிழ்நாட்டில் தான் இது தவறு என கத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Loading...

நரசிம்மராவ் பிரதமராக இருந்த போதுதான் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி நடைமுறைக்கு வந்தது. 1993-1994 காலத்தில் அமலுக்கு வந்த போது வருசத்துக்கு 25 லட்சமாக இருந்து படிப்படியாக உயர்ந்து 2012 ல் காங்கிரஸ் ஆட்சியில் வருடத்திற்கு 5 கோடியாக உயர்ந்தது.

நாட்டில் நிறைய சிறிய கட்சிகள் இந்த எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்துதான் கட்சியை நடத்தி வருகின்றன ஆண்டிற்கு 5 கோடி என்றால் வருடத்திற்கு 25 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக கிடைக்கிறது., திருமாவளவன் போன்றோர் கடுமையாக தாக்கி அறிக்கை விடுவதன் பின்னணியில் இதுவும் ஒன்று என்கின்றனர் விமர்சகர்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினும் நேற்று கடுமையாக விமர்சனம் செய்து கண்டித்ததில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், 24
எம்பிக்கள் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கு 240 கோடி ரூபாய் கிடைக்காது என்றால் வருத்தம் இருக்கத்தான் செய்யும். கார்த்திக் சிதம்பரத்துக்கு இதெல்லாம் பாக்கெட் மணி தான். இருந்தாலும்
இழக்க மனமில்லை என்பதால் அவரும் கண்டனம் தெரிவித்து முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார்.

ஒவ்வொரு முறையும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இந்த எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறது என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

நிறைய எம்பிக்கள் தங்களுடைய குடும்ப
உறுப்பினர்கள் உருவாக்கி உள்ள அறக்கட்டளைகளுக்கு அவர்களின் கட்சிகள் சார்ந்த அமைப்புகளின் மூலமாக ஏதோ பெயருக்கு வேலையை பார்ர்த்து விட்டு தொகுதி மேம்பாட்டு நிதியை சுருட்டிக் கொள்கிறார்கள்.இந்த நிதியை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்தஎம்பிக்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் தரம் இல்லை என் றும் பலமுறை சிஏஜி ரிப்போர்ட் கூறி உள்ளது.

தற்போது கொரானா தடுப்பு நிதிக்கு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி
திருப்பப்பட்டுள்ளதால்பட் டு மக்களின் பணத்தை முதல் மு றையாக மக்களுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள் எனவும்

எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் வந்த பணத்தில் இருந்து சுமார் 8000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து மக்கள் நல பணிக்கு கொண்டு வைத்துள்ளார் மோடி எனவும் 26 ஆ ண்டுகளுக்கு பிறகு எம்பிக்களின் MPLA DS நிதி உண்மையிலேயே மக்களுக்கு
பயன் பட இருக்கிறது. இதனால் பிரதமருக்கு உண்மையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார் விஜயகுமார் அருணகிரி.

பிரதமரின் ஒரே கையெழுத்து மூலம் திமுக mp கள் இழந்தது 240 கோடி எனவும் இதில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பணம் வேறு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி மாற்றங்களை மோடி எடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

ஓ அதுதான் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தாரா….

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*