Connect with us

#24 Exclusive

இளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி ! எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் !

Published

on

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பின்னணியில் நடப்பதாகவும், தமிழ் மொழியை கிறிஸ்துவ மதத்திற்கு சொந்தமானதாக மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், அதனால் தமிழ் அடையாளமாக திகழும் சான்றோர்கள் திருவள்ளுவர், இசை, நாடகம் போன்றவற்றை அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் முழு நேர வேலையாக செய்து வருவதாகவும் அமெரிக்காவில் கிறிஸ்துவ மதத்தை ஆராய்ச்சி செய்துவரும் எஸ்தர் என்பவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

Esther video

உலகில் மூத்த மொழியான தமிழை தங்களுக்கானதாக மாற்றினால் உலகெங்கும் உள்ள தமிழர்களை எளிதில் மாற்றிவிடலாம் என்றும் அவர் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் அவர் சொன்னதுபோல் இந்து கடவுளை புகழ்ந்து பாடப்பட்டுவந்த கர்நாடக இசையை கிறிஸ்துவ மதத்திற்கு உரியதாக மாற்றவேண்டும் என்று முயற்சிகள் நடைபெறுகிறதாம்.

அதில் ஒரு பகுதியாக பிரபல கர்நாடக பாடகர்களை வைத்தே இயேசுவை கர்நாடக இசையில் புகழ்ந்து பாடச்செய்து அதன் மூலம் வரும்காலத்தில் கர்நாடக இசை தங்களுக்கு சொந்தமானது என வெளிநாடுகளில் பிரபலப்படுத்தி நினைத்ததை சாதிக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

இந்நிலையில் அதற்கு உதவும் வகையில் பிரபல இளம் பாதிரியார் ஜெபராஜ் விரித்த வலையில் பிரபல கர்நாடக பாடகி அனுராதா ஸ்ரீராம் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது, மேலும் அவர் மகனுக்கு பிரபல கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்ததே யேசுதான் என்று அனுராதா குறிப்பிடுகிறார். மேலும் கர்நாடக இசையில் கிறிஸ்த்தவ பாடல் ஒன்றிணையும் பாடி இனி தினமும் பிரேயர் செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tnnews24 web team

தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி எஸ்தர் சொல்லியது போன்றே இசையை மாற்ற முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதால் பலரும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர், சமீபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் எஸ் ரா சற்குணம் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் என்ன நடக்கிறது திருமாவளவன் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்று வாய் கூசாமல் சொல்கிறார் இப்போது திரைமறைவில் இது போன்ற செயல்கள் நடக்கிறது, தமிழர்களின் பாரம்பரியம் அழியப்போகிறதா? இல்லை காப்பாற்றப்படுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும் !

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com