Connect with us

சினிமா

மாநாட்டுக்குப் பின் வரிசையாக ஒப்பந்தமாகும் சிம்பு – முன்னணி இயக்குனருக்கு வாய்ப்பு!

சிம்பு, மாநாடு திரைப்படத்திற்குப் பின்பு இயக்குனர் சேரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சுந்தர் சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. அதன்பின் அவர் நடிக்க ஒப்பந்தமான மாநாடு திரைப்படம் பலதரப்பட்ட பிரச்சனைகளால் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடக்க உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் மாநாடு படத்தில் நடித்து முடித்ததும் வரிசையாக படங்களில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Loading...

அதன் ஒரு கட்டமாக சிம்புவின் அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சேரன் கடைசியாக இயக்கிய ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற திரைப்படமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.

Loading...

இந்நிலையில் சேரன் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்ததாகவும் அதனால் அடுத்த படமாக அதிலேயே நடிக்க சிம்பு ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே சேரன், விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டில் எந்த படத்தை சேரன் முதலில் இயக்குவார் என கேள்வி எழுந்துள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending