Connect with us

#24 Exclusive

SI வில்சன் கொலை விசாரணை, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட DSP தீவிரவாதிகள் நோக்கம் என்ன?

Published

on

கன்னியாகுமரி மாவட்டதில் சோதனையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்த நிலையில் அதுகுறித்த விசாரணைகள் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டு NIA உடன் கலந்தாலோசித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில் கொலையை செய்துவிட்டு மசூதிக்குள் சென்ற கும்பல் சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் மும்பையில் துப்பாக்கியை பெற்று திட்டமிட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது., டிஎஸ்பி தேவிந்தர் சிங் என்ற அதிகாரி கடந்த சனியன்று இரு பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Loading...

டிஎஸ்பி தேவிந்தர் சிங் பயங்கரவாதிகளுடன் பிடிபட்டது கொடூரமான குற்றம் என்றும் அவரும் மற்ற பயங்கரவாதிகள் போலவே நடத்தப்படுவார் என்றும்  காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன் தேவிந்தர் சிங் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.ஆனால் நேற்று அவர் இரு பயங்கரவாதிகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஜம்மு நோக்கி சென்றுள்ளார்.

Loading...

தேவேந்திரர் சிங்க் இதற்கு முன்னர் குடியரசு தலைவர் கையால் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக விருது பெற்றவர், அவரது வீட்டில் இருந்து 3 ஏகே-47 மற்றும் 5 கிரேனேடு குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

அவருடன் சேர்த்து நவீத் அகமது மற்றுய ராபி அகமது என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நவீத் அகமது என்பவன் முன்னாள் காஷ்மீர் காவல் துறையில் பணியாற்றி தீவிரவாதியாக மாறியவன் என்றும், இந்தியாவில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்கவும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த குற்றவாளிகள் திட்டம் தீட்டிய சம்பவம் இந்தியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending