ஏன் சிறப்பு எஸ் ஐ வில்சனை சுட்டு கொன்றோம் தீவிரவாதிகள் தெரிவித்த பகீர் தகவல் !

காவல் அதிகாரி வில்சனை சுட்டு கொன்றது ஏன் தீவிரவாதிகள் தெரிவித்த பகீர் தகவல் !

Loading...

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 – ம் தேதி அன்று ஹல் ஹமீத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் கொடூரமாக சுட்டு கொலை செய்யபட்டார் சுட்டு கொலை செய்தவர்கள் மசூதியில் சென்று ஒழிந்து அங்கிருந்து தப்பியதை அறிந்த காவல்துறை 8 தனிப்படை அமைத்து கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது.

அதனை அடுத்து உடுப்பி காவல்நிலையத்தில் தீவிரவாதிகள் அப்துல் ஹமீது, தவுபிக் ஆகிய இருவரும் கர்நாடக காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர், அவர்களை கர்நாடக காவல்துறை தமிழகம் காவல்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தது, அதன் பிறகு கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் வில்சனை கொலை செய்ததற்கு காரணம் காவல்துறையினருக்கு எங்கள் இயக்கத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதற்காக என்றும், தொடர்ந்து எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினர் கைது செய்ததால் இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளனர்.

Loading...

அதனையடுத்து இன்று குற்றவாளிகள் இருவரையும் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர் அப்போது அவர்கள் தங்களை காவல்துறையினர் என் கவுண்டர் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து தீவிரவாதிகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தி இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களுடன் பணத்தை பெற்று நாசவேலைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது, இந்த முறை குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு அரசு நேரடியாக என்கவுன்ட்டர் செய்து விடவேண்டும் என்றும் அவர்களை சிறையில் வைத்தால் நாளை ஜாமினில் வெளிவந்து மற்றொரு நபர்களை கொலை செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*