Connect with us

#24 Exclusive

SI வில்சனை கொன்றது யார் தெரியுமா? இப்படி ஒரு முட்டினை பாகிஸ்தான் காரன் கொடுப்பதே சந்தேகம்? திருமா பகிர் விளக்கம் !!

சமூகவலைத்தளம் :- பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கேரள மாநிலத்தை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது சுட்டுக்கொல்லபட்டு கொலை செய்யப்பட்டார், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தினை தொடர்ந்து தமிழக காவல்துறை 8 தனி படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியது.

இதில் ஏற்கனவே இந்து இந்து முன்னணி தலைவரை கொன்ற ஸமித் என்ற தீவிரவாதி ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்த SI வில்சனை கொலை செய்துவிட்டு இருவர் மசூதிக்குள் சென்று ஒழியும் வீடியோ காட்சிகள் வெளியானது, அதனை தொடர்ந்து டெல்லி, கேரளாவில் பிடிபட்ட மற்றொரு தீவிரவாதிகளுடன் விசாரணை மேற்கொண்ட போது அல் ஹமீத் என்ற தனி தீவிரவாத அமைப்பு ஒன்றிணை தொடங்கி 14 பேர் இணைந்து தென் இந்தியாவை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்தது.

SI வில்சன் பிரேத பரிசோதனையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மற்றும் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது, அதன் மேலும் ஒரு பகுதியாக வில்சன் உடலில் இருந்த குண்டுகள் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் துப்பாக்கியுடன் ஒத்து போவதாக அறிக்கையில் கண்டறியப்பட்டது இவை அனைத்தும் காவல் துறையால் உறுதி செய்யப்பட்டது.

Loading...

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடுத்த அறிக்கையை பார்ப்போம் அதில் :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்அதிகாரி எஸ்எஸ்ஐ வில்சன் அவர்கள் பணியிலிருக்கும்போது நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அத்துடன், வடமாநிலங்களில் நடப்பதைப் போல தமிழகத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகள் பரவுகின்றனவோ என்னும் அச்சத்தையும
மேலோங்கச் செய்கிறது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Loading...

இது தொடர்பாக, சிசிடிவியில் பதிவாகியுள்ள சிலரின் நடமாட்டங்களை மட்டுமே வைத்து ஒரு முடிவுக்கு வருவதும் புலனாய்வுக்கும் முன்னரே ஊடகங்கள் குற்றவாளிகள் இன்னின்னார்தான் என்று தீர்மானிப்பதும் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு எதிராக அமைந்துவிடும்.

இத்தகைய நடவடிக்கைகளில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத்தவறினால், தமிழகம் பயங்கரவாதிகளின் பிடிகளுக்குள் சிக்கிக்கொள்ளும். எனவே தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் விரைந்து புலனாய்வுகளை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்து தமிழகத்தில் பயங்கரவாதப் போக்குகள் பரவாமல் தடுக்க வேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இவ்வாறு ஒரு கண்டன அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட அதனை ஷாநவாஸ் போன்றோர் பகிர்ந்துள்ளனர், இந்நிலையில் நமக்கு சில ஐயங்கள் எழுகிறது, டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம், JNU பல்கலை கழகங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றபோது, எந்த வித வீடியோ காட்சிகளோ, காவல்துறை அறிக்கையோ, குற்றவாளிகளோ பிடிபடாத போது எப்படி பாஜகவை சேர்ந்த நபர்கள்தான் அந்த குற்றத்தில் ஈடுபட்டார் என்று உங்களால் குற்றம் சுமத்த முடிந்தது.

இன்னும் ஒருபடி மேலே சென்று அனைத்திற்கும் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் ஷாநவாஸ் போன்றோர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன் மதம் பாசமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன, விடுதலை சிறுத்தைகள் கட்சி இதற்கு முன்னர் தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் சொந்த தலித் மக்கள் பிணத்தை முஸ்லிம்கள் தெருவழியாக கொண்டு செல்ல கூடாது என்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தபோது யாருக்கு சாதகமாக நின்றது என்று பார்த்தால் புரியும்.

நீங்கள் கொடுப்பது போன்ற முட்டினை பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்தவர்கள் கூட கஷ்டம் என்று அம்பேத்கர் புகைப்படத்தை வைத்த ஒருவர் உங்கள் அறிக்கையின் கீழே கமெண்ட் செய்திருக்கிறார். அதுதான் உண்மையும் கூட என்று தோன்றுகிறது தமிழகத்தில் இந்து கிறிஸ்துவர் உயிர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் அதற்கு கண்டனம் கூட மூசி மெழுகும் படிதான் இருக்கிறது இனியாவது மக்கள் புரிந்து கொள்வார்களா? SI வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளால் தமிழகம் சுடுகாடாக மாறப்போவது உறுதி !

செ. உதயகுமார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending