பேருந்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் – மனம் திறந்த அஜித் பட நடிகை !

பேருந்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் – மனம் திறந்த அஜித் பட நடிகை !

Loading...

அஜித்தின் நேர்கொண்ட பார்வைப் படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொரோனாவை முன்னிட்டு தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளார்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் அதற்கு முன்னதாக விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகியப் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் இப்போது நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா அச்சம் காரணமாக அவர் தன்னை வீட்டுக்குள்ளேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Loading...

அதற்குக் காரணம் இவர், கடந்த மாதம் மார்ச் 16 ஆம் தேதி அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் பின்னர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் விமானப் பயணம் செய்துள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள் அவரைத் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைக் கூறியுள்ளனர். இதையடுத்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட நேற்று அவர் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று ‘சமீபத்தில் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு வெப் சீரிஸை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் பல இன்னல்களை தினமும் அனுபவிக்கின்றனர். நானும் எனது கல்லூரி காலத்தில் இதுபோன்ற தொல்லைகளை அனுபவித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் யுத்தத்துக்கு செல்வது போலவே செல்வேன். யாராவது சில்மிஷம் செய்வார்களோ என்ற அச்சத்திலேயே இருப்பேன். இதனால் தனியார் பேருந்துகளிலும் செல்ல ஆரம்பித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*