கடவுள் நம்பிக்கையை இழந்தது ஏன்? நேர்கொண்ட பார்வை நடிகை பதிவு!

கடவுள் நம்பிக்கையை இழந்தது ஏன்? நேர்கொண்ட பார்வை நடிகை பதிவு!

Loading...

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய 14 ஆவது வயதில் கடவுள் நம்பிக்கையை இழந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

கன்னட நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத், தமிழில் விக்ரம்வேதா, ரிச்சி மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த லாக்டவுன் நாட்களில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் பேசிவரும் அவர் தன்னுடைய 14 ஆவது வயதில் தான் ஏன் கடவுள் நம்பிக்கையற்றவராக மாறினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

Loading...

இது சம்மந்தமாக ‘என்னுடைய 14 வயதில், நான் ஒரு குடும்ப பூஜையில் கலந்துகொண்டேன். அப்போது என்னுடைய அம்மா என்னுடன் இருக்கவில்லை. அப்போது எனக்கு திடீரென்று மாதவிடாய் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நான்  சானிட்டரி பேட்களைக் கொண்டிருக்கவில்லை. இது பற்றி என் அருகில் இருந்த ஒரு உறவினர் பெண்ணிடம் கூறினேன். என் பக்கத்தில் அமர்ந்து இருந்த வேறொரு நல்ல குணம் கொண்ட பெண் நான் பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு ’பரவாயில்லை குழந்தை… உன்னை கடவுள் மன்னித்துவிடுவார் ( மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காக)’ எனக் கூறினார். அன்றுதான் நான் பெண்ணியவாதியாகவும், கடவுள் நம்பிக்கையற்றவளாகவும் மாறினேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*