Connect with us

#24 Exclusive

தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் ! இளம்பெண் இருக்கிறாரா? இல்லையா?

Published

on

மதுரை :- மதுரையை சேர்ந்த இளம்பெண் சுகன்யா தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு போராடி காவல்நிலையம், ஊடகம் உள்ளிட்ட அனைத்து கதவுகளையும் தட்டி பார்த்து தனக்கு நியாயம் கிடைக்காத சூழலில் தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை அவரை யாரேனும் ஏதேனும் செய்துவிட்டார்களா என்ற அதிர்ச்சி சம்பவம் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

மதுரை மாவட்ட திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் விரகனூர் பாசப்பிரபு எனும் பிரபு, இவர் சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருக்கமாக இருந்துவந்துள்ளார், மேலும் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் தனது செல்போனில் படம்பிடித்துவைத்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் பிரபு சுகன்யாவுடன் இருந்த புகைப்படங்களை பகிர இருவரது விவகாரங்களும் வெளிஉலகிற்கு வர தொடங்கியுள்ளது, அதனை தொடர்ந்து சுகன்யா வீட்டில் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்க்காமல் வெளியில் அனுப்பிவிட்டனராம். இந்நிலையில் அவர் தனக்கு நீதி வேண்டும் என்றும் தன்னை ஏமற்றிய பிரபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரடியாக காவல்நிலையம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

Loading...

ஆனால் அங்கு புகாரை எடுக்கவே உதவி ஆய்வாளர் காலம்தாழ்த்தியதாக கூறப்படுகிறது, பின்னர் நீண்ட இழுபறிக்குப்பின்னர் பிரபுவின் மீது சுகன்யா கொடுத்த புகார் பதிவு செய்து எப் ஐ ஆர் கொடுக்க பட்டிருக்கிறது, ஆனால் தற்போதுவரை பிரபுவை போலீசார் கைது செய்யாமல் இருக்கிறார்கள். ஆட்சியில் எதிர்க்கட்சியில் உள்ள ஒரு சாதாரண நபருக்கே காவல்துறை அதிகாரிகள் இவ்வளவு கரிசனம் காட்டியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு திருமங்கலத்தை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர்கள் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் புகார் அளித்த இளம்பெண் அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றிய எந்த தகவலும் தெரியாததால் தற்போது அவரது நண்பர்கள் அவரை தேடி வருகிறார்களாம். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கி குற்றவாளியை கைது செய்வதுடன் பாதிக்கப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்ற விசாரணையில் ஈடுபடவேண்டும் என்றும், இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

(பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகள், மிரட்டல்கள் போன்றவை அந்த பெண்ணிற்கு பல்வேறு தரப்பிலும் கொடுக்கப்பட்டது குறித்து முன்பே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது )

பாதிக்கப்பட்டு வீதியில் நிற்கும் பெண்ணிற்கு நியாயம் கிடைக்குமா?

ஆனால் இத்தனை பாதிப்பிற்கு உள்ளாகிய நபரை திமுக இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Loading...

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com